உள்ளூர் செய்திகள்

வானலை வழியே… 2025 மே 31ல் கவியரங்கம்

வடஅமெரிக்க தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவனத்தின் தமிழ் பெருமை கூறும், தமிழ் மணம் பரப்பும், தமிழன்பை விதைக்கும் பல்வேறு நிகழ்வுகளின் வரிசையில் கவியரங்கம். தலைமையேற்பவர்: ரேவதி சுயம்புலிங்கம் (@குட்டி ரேவதி). இவர் 'காலத்தை செரிக்கும் வித்தை' அறிந்தவர். 'கால வேக மதயானை'யுடன் வெற்றிப்பாதையில் பயணிப்பவர். 'தனிமையில் ஆயிரம் இறக்கைகள்' கொண்டு பறப்பவர். கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், பெண்ணிய ஆர்வலர், திரைப்பட இயக்குனர் மற்றும் சித்த மருத்துவர் என பன்முகச் சக்தி வடிவமானவர். கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் இவரது தனிச்சிறப்பு. பல கவிதை, சிறுகதை, கட்டுரைத் தொகுப்பு நூல்கள் வாயிலாக அறிவு விதைகளை விதைத்தவர். அதன்வழி தெளிவைத் துளிரச் செய்தவர். இவரின் தலைமையில் தங்களின் கவிதைகளை அரங்கேற்றம் செய்ய வரவேற்கிறோம். நம் மொழிக்குள் மலர்வோம். நறுமணத்தை பிரபஞ்சம் முழுதும் பரப்புவோம். காத்திருப்போம் 31 மே 2025 வரை. அதற்கு முன் பதிவு செய்து கொள்வோம் 10 ஏப்ரல் 2025க்குள். எட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் வாசிக்கப்படும். கவிதையின் ஆசிரியரே இணையவழி நிகழ்வில் வாசிப்பார். தேர்ந்தெடுக்கப்பட்ட கவிஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் உங்கள் கவிதைகளை ஏப்ரல் 10 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பங்கேற்க பதிவு செய்யுங்கள். நேரம் / Time | 7:30 AM (IST) / 6:00 PM (PST) நாள் / Day | சனிக்கிழமை / Saturday தேதி / Date | மே / May 31, 2025 இடம் / Venue | ஜூம் நிகழ்வு/Zoom Event அனுமதி / Entrance | இலவசம் / Free பதிவு / Register @ tinyurl.com/Kaviarangam2025 மேலும் விவரங்களுக்கு /For more information +1 (650) 7722992 (K. Bala) +1 (510) 6056189 (J. Indhumathi) சமர்ப்பிப்புக் கட்டணம் Submission fee ₹1000/RM50/USD10 Zelle to Tamil & Tamilar Diaspora Inst +1 305 903 2728 Direct bank transfer to Academic Nexus for Globalization, Public Bank (Malaysia) Account No: 320 825 9117. Public Bank Swift Code: PBBEMYKLXXX தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்கொரு குணமுண்டு அமிழ்தம் அவனுடை மொழியாகும் அன்பே அவனுடைய வழியாகும் (நாமக்கல் கவிஞர்) வேறென்ன சொல்வது… மொழி வழி நம் உயிர் உரசிக் கொள்வோம்… சுயம் தொலைத்து அன்பில் நனைவோம் - மலர்வோம்… விதிமுறைகள் * கவிதை உங்கள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். * கவிதை வேறு இணைய தளத்திலும், பத்திரிகைகளில் எங்கும் பதிவிட்டிருக்கக்கூடாது. * புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை, மரபுக்கவிதை ஏற்றுக் கொள்ளப்படும். * தமிழ் கவிதைகள் - கவிதைகள் எந்த தலைப்பில் வேண்டுமானாலும் இருக்கலாம். அரசியல், சாதி, மதம் போன்றவை இடம் பெறக்கூடாது. * தங்களது படைப்பில் ஆங்கில வார்த்தைகள் கலப்பு இருக்கக் கூடாது. * அதிகபட்ச கவிதை வரிகள் — A4 பக்கத்தில் இரண்டு பக்கம் மிகாமல் இருக்க வேண்டும் (எழுத்து அளவு:12). * கவிதைகள் தேர்ந்தெடுப்பதில் நடுவர்கள் முடிவே இறுதியானது. - தினமலர் வாசகி சுசீலா மாணிக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !