உள்ளூர் செய்திகள்

பிரிஸ்பேனில் தியாகராயர் ஆராதனை விழா

பிரிஸ்பேனின் கர்நாடக இசைக் கலைஞர்கள், தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவை ஸ்பிரிங்ஃபீல்டிலுள்ள வேதாந்த சொசைட்டியின் கலையரங்கில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இசைக்கலைஞர்கள், பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஒன்று சேர்ந்து பாடினர். தவிர, தியாகப்பிரம்மத்தின் கீர்த்தனைகளை இசைக்கலைஞர்கள் தனியாகவும், குழுவாகவும் பாடி சிறப்பித்தனர். ஏராளமான இசைப்பிரியர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை இரசித்தனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.- நமது செய்தியாளர் ஆ சோ ரெங்கநாதன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !