உள்ளூர் செய்திகள்

அமெரிக்காவில் மயிலும் தாமரையும் அதிசயம்!

பெற்றோர்களுக்கு வாரத்தில் 5 நாள் வேலைக்காகவும் பிள்ளை குட்டிகளுக்காகவும் ஓட்டம்!அப்புறம் வார கடைசியில் பொழுது போக்கவும் ஓட்டம்! அடுத்து -- தச்சு.. பிளம்பிங்..மின்சாரம்.. தண்ணி.. கழுக...துடைக்க .. நீர் -- நிலம் - நெருப்பு என எதுக்கும் ஆள் அகப்படாமல் அதற்கும் நெருப்பாய் ஓட்டம்! அனைத்து ஆணியையும் சொந்தமாகவே பிடுங்கியாக வேண்டும்-- டாலர் கணக்குப் பார்த்து..பார்த்துக் கொண்டு! லோனு.. டாக்ஸ்சூ .. இன்சூரன்ஸ்சூ.. மருத்துவத்துக்கு சூச்சூ ! ஆறு மாத கடும் குளிர் ! இலவச ஐஸ்! சீறும் காற்று! முனுக்க்கிக் கொண்டு சிணுங்கும் மழை ! ...ங்கப்பா! என்னலே பொழப்பு இது! ********** டெக்சாசில் குளிர் அம்புட்டு இருக்காது. ---நம்மூர் மாதிரி தான் என்றார்கள். ஆனாலும் நிலவரம் ..சொல்வதற்கில்லை.மருமகனின் வீடு ஃபைவ் ஸ்டார்! தங்கக்கூண்டு ! ஆனாலும் கூட நமக்கு டீ கடை பெஞ்சு தான் சுகம். எங்காவது சுத்தப் போகலாம் என்றால் மிரட்டும் குளிர் ! அடுத்து விமானம்! அதை விட அதிகமாய் விரட்டும் டாக்ஸி கட்டணம்! மழை தூங்கின ஒரு மாலையில் , குட்டீசுடன் டெக்ஸாஸ் தலை நகரமான ஆஸ்டினில் " பானெல் மவுண்ட்" விஜயம்! டெக்சாஸ் Indian Affairsசில் கமிஷனராக பணியாற்றின ஜார்ஜ் பாணெல் என்பவரின் நினைவாக இப் பெயராம்! மிக சிறப்பு! அப்படியே அடிவாரத்தில் மேஃபீல்டு பார்க்!அங்கே... அட..! இந்திய தேசிய பறவையான மயில்களின் பராமரிப்பு! இன்னும் கொஞ்சம் நடந்தால் ..மறுபடியும் .. அட! குளங்களில்... நம் --தேசியமலர்! இலையோடு..தண்டோடு.. மலர்ந்திருக்கின்றன! என். சி. மோகன்தாஸ் with R.தினேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்