பிராங்க்ஃபர்ட் தமிழ் சங்கம் (2025- 2027)
ஜெர்மெனியின் பிராங்க்ஃபர்ட் தமிழ் சங்கம் தன்னுடைய பத்தாவது ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ் சங்கமானது, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் கமிட்டி உறுப்பினர்களை புதிதாக தேர்ந்தெடுத்து தமிழுக்கும் ஜெர்மெனியிலிருக்கும் தமிழ் மக்களுக்கும் சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் அடுத்த இரண்டு வருடங்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விபரம் பின்வருமாறு:- தலைவர்: பாலாஜி பாலு ஹரிதாஸ்; துணைத்தலைவர்: பழனி வெற்றிவேலன் ஜெயபாலன்; பொருளாளர்: சத்யராம் ரங்கநாதன்; பொது செயலாளர்: நாக குமார் கங்கேஸ்வரன்; கலைத்துறை செயலாளர்: சத்தியதாசன் பாலசுப்ரமணியன்; விளையாட்டுத்துறை செயலாளர்: நிர்மல் பாஸ்கர் பவண்ராஜ். கமிட்டி உறுப்பினர்கள்: அர்ச்சனா கேசவன், கனக ராணி ஐயப்பன், ஸ்வர்ண மாலதி, கண்ணன் ஆதிசேஷன், ப்ரஷ்ணவ் ஜீவானந்தம், ஸ்ரீதர் சண்முகம், சௌந்தரராஜு கோவிந்தராஜு, வெற்றிசெல்வன் ராமு, தங்கராஜ் சுப்பிரமணியம் வரவு செலவு தணிக்கையாளர்கள்: சக்திவேல் சுப்பிரமணியன், வெங்கடேஷ் குமார். முந்தைய குழு உறுப்பினர்களின் பணி மற்றும் பங்களிப்பை பாராட்டி நம்மிடம் பேச ஆரம்பித்த புதிய தலைவர் பாலாஜி பாலு ஹரிதாஸ், 'தமிழ் மற்றும் ஜெர்மன் கலாச்சார ஒருங்கிணைப்புக்கு வழி ஏற்படுத்தி ஜெர்மானிய மக்களிடம் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை கொண்டு சேர்ப்பது எங்களுடைய முக்கிய நோக்கமாகும். அது மட்டுமல்லாமல் அடுத்து வரும் இளைய தலைமுறைக்கு நம்முடைய பாரம்பரிய கலைகளான சிலம்பம், கரகாட்டம், பறை போன்ற கலைகளை கொண்டு சேர்ப்பதில் தொடர்ந்து பங்காற்றி வருகிறோம். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்' என்றார். அனைவருக்கும் வாழ்த்துக்கள். - நமது செய்தியாளர் ஜேசு ஞானராஜ்