உள்ளூர் செய்திகள்

அருள்மிகு சிவன் கோயில், சுவிட்சர்லாந்து

அருள்மிகு சிவன் கோயில் சுவிட்சர்லாந்தில் கேரிடன் ஆஃப் சூரிச் மண்டலத்தில் கிளாட்ப்ரக் நகராட்சியில் அமைந்துள்ளது. 1990 களில், சுவிட்சர்லாந்தில் தமிழ் மக்கள் ஆன்மீக மற்றும் கலாச்சார பராமரிப்புக்கான ஒரு மையம் சூரிச் மண்டலத்தில் நிறுவப்பட்டது. தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்கவும் பராமரிக்கவும் இது உருவாக்கப்பட்டது. அட்லிஸ்வில்லில் உள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணியர் கோயில் மற்றும் கிளாட் ப்ரூக்கில் உள்ள அருள்மிகு சிவன் கோயில் அறக்கட்டளை 1994 இல் நிறுவப்பட்டது. கிளாட் ப்ருக்கில் இண்டஸ்ட்ரீஸ்ட்ராஸ் 34, 8152 என்ற முகரியில் இந்த சிவன் கோயில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் இரண்டு முறை பூவஜகள் நடைபெறுகின்றன. திருவிழாக் காலங்களில் பெருமளவிலான பக்தர்களும், பார்வையாளர்களும் வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !