செந்தோசா
செந்தோசா சிங்கப்பூரில் உள்ள, மிகவும் பரவலாக அறியப்படும், கேளிக்கைத் தீவு ஆகும். செந்தோசா என்னும் பெயர் மகிழ்ச்சி எனப்பொருள் தரும் சமக்கிருதச் சொல்லில் இருந்து தோன்றியது.. இங்கு ஆண்டொன்றுக்கு இருபது மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர். இங்கு 2 km நீளமுடைய கடற்கரை, சிலோசோ கோட்டை, இரண்டு குழிப்பந்தாட்ட மைதானங்கள், மெர்லயன் சிலை,14 தங்கு விடுதிகள், மற்றும் யூனிவர்சல் ஸ்டூடியோஸ் அடங்கிய செந்தோசா கேளிக்கை உலகம் ஆகியன சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கின்றன. இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானியர்கள் ஆட்சியில் கோட்டை கட்ட இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தனர்.