உள்ளூர் செய்திகள்

செம்ம ( தென்னிந்திய உணவகம்)

செம்ம ( தென்னிந்திய உணவகம்) கிரீன்விச் ஏவ், நியூயார்க்நியூயார்க் நகரின் கிரீன்விச் அவென்யூவில் அமைந்துள்ள செம்மா, வீடுகளில் மட்டுமே கிடைக்கும் வழக்கமான தென்னிந்திய உணவு வகைகளுக்குப் பெயர் போனது. 2022 ஆம் ஆண்டில், உயர்தர உணவின் காரணமாக மிச்செலின் நட்சத்திரத்தைப் பெற்ற ஒரே உணவகம் இதுவாகும் மற்றும் அமெரிக்காவின் சிறந்த தென்னிந்திய உணவகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. செஃப் விஜய் குமார் மற்றும் அவரது குழுவினர் தங்கள் விருந்தினர்களுக்கு தென்னிந்திய சுவையான உணவுகளை வழங்குகிறார்கள். செம்மாவில் உங்களுக்கு மேற்கத்திய கிராமிய மணம் வீசும், பாரம்பரிய மர மேசைகளில் சிறந்த உணவு வழங்கப்படுகிறது.காய்கறிகள் நிறைந்த மிருதுவான மொறுமொறுப்பான ஊத்தாபம், , மிளகாய்த்தூள் தூவிய மங்களூர் காலிஃபிளவர் மற்றும் மசாலா-உருளைக்கிழங்கு நிரப்பப்பட்ட தோசை, ஆட்டுக்கறி சுக்கா, மற்றும் கன்னியாகுமரி நண்டு மசாலா போன்ற தென்னிந்திய உணவு வகைகளை வழங்குகிறது. ஒரு பாரம்பரிய தென்னிந்திய உணவகம் என்று தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்ளும் இந்த உணவகம் பார்வையிடத் தகுந்தது.முகவரி: 60 Greenwich Ave, New York, NY 10011


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !