உள்ளூர் செய்திகள்

ராசா (தென் இந்திய உணவகம்) பர்லிங்கேம், கலிபோர்னியா

   ராசா (தென் இந்திய உணவகம்)பர்லிங்கேம், கலிபோர்னியாகலிபோர்னியாவின் பர்லிங்கேமில் அமைந்துள்ள ராசா, பெரும்பாலான வெளிநாட்டவர்களால் குறிப்பாக அமெரிக்கர்களால் சாதாரணமாக கருதப்படும் இந்திய உணவுகள் பற்றிய பார்வையை மாற்ற, உரிமையாளர் அஜய் வாலியா மற்றும் செஃப் டி குசைன் விஜய் குமார் ஆகியோரால் நிறுவப்பட்டது. அமெரிக்காவின் சிறந்த தென்னிந்திய உணவகங்களில் ஒன்றான ராசா, தென்னிந்திய உணவு வகைகளுக்கு புதிய முக்கிய்துவத்தை அளித்து, தரமான இடுபொருட்கள் மூலம் மற்றும் அதிநவீன மற்றும் பாரம்பரிய இந்திய சுவை பராமரிக்கிறது.சான் பிரான்சிஸ்கோ குரோனிக்கிள் உணவு விமர்சகர் மைக்கேல் பாயரால் 'தி பே ஏரியாவின் சிறந்த இந்திய உணவகம்' என்று மிச்செலின் நட்சத்திர விருது பெற்ற உணவகம் குறிப்பிடப்பட்டுள்ளது. ராசா விருந்தினர்களுக்கான சிறந்த மெனுவை வடிவமைப்பதற்காக உரிமையாளர் வாலியா, சமையல் குறிப்புகளுக்கான நிறைய யோசனைகளை சேகரித்து வைத்துள்ளார். செஃப் குமார் எப்போதும் பர்லிங்கேம் விவசாயிகள் சந்தையில் புதிய, இயற்கையான இடுபொருட்களையும், மற்றும் கரிமப் பொருட்களை உள்ளூர் பண்ணைகளில் இருந்து தரமான கடல் உணவுகள் மற்றும் தரமான இறைச்சிகளையே வாங்குகிறார்.அவர்களின் மெனுவில் பாரம்பரிய தென்இந்திய பட்டர் சிக்கன், தோசை, இறைச்சி மற்றும் சைவ உணவு வகைகள் போன்ற ருசியான பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்து. ஒவ்வொரு உணவு வகையும் ஒரு தனித்துவமான சுவை நிறம் மற்றும் மணத்துடன் வழங்கப்படுகிறது.                                                                                                                                                                                               முகவரி: 209 Park Rd, Burlingame, CA 94010/  San Carlos1143 San Carlos AveSan Carlos, CA 94070


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !