கனடா - தமிழ்நாடு கலாச்சாரச் சங்கம் 2025- 27
1997ஆம் ஆண்டில் தொடங்கி, இலாப நோக்கமின்றி இயங்கி வரும் தமிழ்நாடு கலாச்சாரச் சங்கம் கனடாவில் வாழும் இந்தியத் தமிழர்களால் நடத்தப்படும் ஒரு சிறந்த சமூக அமைப்பாகத் திகழ்கிறது. கனடாவுக்குக் குடிபெயர்ந்த தமிழர்களுக்கும், கல்வி கற்பதற்காக தமிழகத்திலிருந்து வரும் மாணவர்களுக்கும், அரசியல் மற்றும் தொழில், வணிக காரணங்களுக்காக வருகை தரும் ஆளுமைகளுக்கும் இச்சங்கம் ஒருப் பாலமாக இருந்து பங்காற்றி வருகிறது. கனடா அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள இந்த அமைப்பு, கடந்த மார்ச் 30, 2025 அன்று தனது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தையும் அத்தோடு 2025_-2027 ஆண்டுக்கான நிர்வாகிகளுக்கான தேர்தலையும் நடைமுறைப்படி நடத்தின. இத்தேர்தலில் ஆனந்த் பாபு தலைவராகவும், ரேச்சல் டானியல் துணைத் தலைவராகவும், தேர்வுசெய்யப்பட்டனர். மேலும், உயர்மட்ட நிர்வாக குழுவில் மாரி முத்தரசன், பிரியா வடிவேலு, சேகர் கருப்பன், கோர்டன் மார்ட்டின், கருணாசாமு ஆகியோர் இணைந்து கொண்டனர். இயக்குனர் குழுவில் முருகன் ஸ்ரீராமுலு, அமிர்தவர்ஷினி திருஞானசம்பந்தம், பிருந்தா ராஜமாணிக்கம், நந்தினி செந்தில்குமார், அஷ்ரப் சுலைமான், பழனிச்சாமி பழனிமுருகன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புதியதாக பொறுப்பேற்ற அனைத்து நிர்வாகிகளும் கல்வி, நிர்வாகம் மற்றும் தொழில் துறைகளில் தேர்ச்சி பெற்ற திறமையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பத்து வருடங்களுக்கும் மேலாக, இச்சங்கம் கனடாவில் தமிழகம் சார்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி கற்பித்து வருகின்றது. ஆண்டு தோறும் யோகா, விளையாட்டு, பொங்கல், தீபாவளி, கோடைக்கால ஒன்று கூடல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை இந்தமைப்பு நடத்தி வருகிறது. இந்த தொடர்ச்சியான முயற்சிகள் மூலம், கனடாவில் இந்தியத் தமிழ்க் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதிலும் வளர்ப்பதிலும் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பணிகளை கனடாவில் வாழும் தமிழர்கள் பெருமையுடன் பாராட்டுகின்றனர்.: செய்திப் பகிர்வு- ஆற்றல் மறவன், கனடா - நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்