உள்ளூர் செய்திகள்

மிசெளரி தமிழ்ச் சங்கம் ( 2024- 2025)

மிசெளரி தமிழ்ச் சங்கம் ( 2024- 2025)நிர்வாகக் குழு (2024-2025)வீரபாண்டியன் (தலைவர்); பூபதி சாமிக்கண்ணு (துணைத் தலைவர்); கீதா கணிகண்ணன் (செயலாளர்); அனுராதா நந்தகுமார் (துணை செயலாளர்); கண்ணன் துரைராஜ் (பொருளாளர்); சிவராஜன் ஐயப்பன் (துணை பொருளாளர்); பிரபாகர் நடராஜன் (தகவல் தொழில்நுட்ப இயக்குநர்); ஸ்டான்லி தாமஸ் (இணை தகவல் தொழில்நுட்ப இயக்குநர்); ஆடலரசு சுப்ரமணியம் (நிகழ்ச்சி மேலாண்மை இயக்குநர்); ராஜவிக்னேஷ் ராமநாதன் (இணை நிகழ்ச்சி மேலாண்மை இயக்குநர்); இளங்கோவன் தங்கவேலு (தமிழ் மொழி இயல் இயக்குநர்); மீரா ஜெயபால் (இணை தகவல் தொழில்நுட்ப இயக்குநர்) நிர்வாக இயக்குநர்கள் குழு : செந்தில் ராதாகிருஷ்ணன், ராஜகோபால் கருப்பசாமி, சிவபாலன் செங்கோடன், மஞ்சு ஹரி, சாருலதா சிங்காரவேலன்மிசெளரி தமிழ்ச் சங்க இளைஞர் பிரிவுஇளந்தமிழா, கண்விழிப்பாய்! வாழியநீ! தமிழ்த்தாய்க்கு வரும்பெருமை உன்பெருமை! ஆங்கிலத்தைக் கற்கையிலும் அயல்மொழியைக் கற்கையிலும் எந்த நாளும் தீங்கனியைச் செந்தமிழைத் தெம்பாங்குத்தமிழின் பொன்னேட்டை உயிராய்க் கொள்வீர். சுற்றமும் நட்பும் தழைத்தோங்க, அண்டைநலம் பன்மடங்குப் பெருகிடவே தமிழ்ச்சங்கப் பணிகளில் நாட்டம் கொள்வீரே! அறத்தால் வென்று வாகை சூடுவீரே!!மிசெளரி தமிழ்ப் பள்ளி ( தன்னாட்சி நிறுவனம்)அன்னைதந்த பால் ஒழுகும் குழந்தைவாய் தேனொழுக அம்மாவென்று சொன்னதுவும் தமிழன்றோ! அக்குழந்தை செவியினிலே தோய்ந்ததான பொன்மொழியும் தமிழன்றோ! புதிதுபுதிதாய்க்கண்ட பொருளினோடு மின்னியதும் தமிழன்றோ! விளையாட்டுக் கிளிப்பேச்சும் நம் தமிழேயன்றோ! ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்! கண்டறிவாய்! எழுந்திரு நீ! இளந்தமிழா, கண்விழிப்பாய்! இறந்தொழிந்த பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும்நீ படைப்பாய்! இந்நாள் தொண்டுசெய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே! அடுத்த தலைமுறைக்குத் தமிழைக் கொண்டு சேர்ப்பாய். நம் தமிழ்ப்பள்ளியில் மாணாக்கரைச் சேர்த்திடுவோம். பள்ளிக்கே பல தொண்டுகள் புரிந்திடுவோம். மிசோரி தமிழ் பள்ளி 11 ஆண்டுகளுக்கு முன்பு சில மாணவர்களுடன் நிறுவப்பட்டது மற்றும் அன்றிலிருந்து வேகமாக வளர்ந்து இந்த ஆண்டு 120 மாணவர்களை பதிவு செய்துள்ளது. நாங்கள் தற்போது அமெரிக்கன் தமிழ் அகாடமியுடன் இணைந்துள்ளோம், மேலும் மழலை முதல் நிலை 5 வரையிலான வகுப்புகளுக்கு அவர்களால் வகுக்கப்பட்ட பாடத்திட்டத்தை பின்பற்றுகிறோம். இந்த உன்னத நோக்கத்திற்காக கடினமாக உழைக்கும் 40 அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப தன்னார்வலர்கள் கொண்ட குழுவால் பள்ளி நடத்தப்படுகிறது. பாடத்திட்டம் நமது கலாச்சாரம் மற்றும் அமெரிக்காவில் அறியப்பட்ட நடவடிக்கைகள், திருவிழாக்கள் மற்றும் விளையாட்டுகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் தேனீ போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குகிறோம். குழந்தைகளுக்கு திருக்குறள், தமிழ் பேசுதல், பாடுதல், எழுதுதல் மற்றும் புரிந்துகொள்ளுதல் போன்றவற்றில் வினாடி வினா நடத்தப்படும்.எங்களை பற்றிகணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” வார்த்தைகளால் ஈர்க்கப்பட்ட தமிழர்கள் உலகின் மூலைமுடுக்குகளிலும் பரவியுள்ளனர். நாம் எங்கு சென்றாலும் நமது விலைமதிப்பற்ற மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை எங்களுடன் எடுத்துச் செல்கிறோம். தமிழ் உலகின் பழமையான மற்றும் மிக நீண்ட செம்மொழிகளில் ஒன்றாகும், மேலும் தமிழ் இலக்கியம் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் மேலும் இதை முன்னெடுத்துச் செல்ல அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.பணிமிசோரி மாநிலத்தில் வசிக்கும் நான்கு வயது மற்றும் அதற்கு மேல் உள்ள மாணவர்களுக்கு, உலகின் பழமையான மற்றும் பரவலாகப் பேசப்படும் செம்மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை முறையாகக் கற்பித்தல்.பார்வைதொடர்ந்து நடத்தப்படும் கல்வி நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் சமூக செயல்பாடுகள் மூலம் அமெரிக்காவில் வாழும் குழந்தைகளிடையே தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தின் மீதான நிலையான ஆர்வத்தை ஊக்குவிப்பதே எங்கள் பார்வை. இந்த ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கைகள் எங்கள் மாணவர்களுக்கு அவர்களின் பள்ளி வேலையிலிருந்து பெறப்பட்ட மொழி மற்றும் இலக்கிய திறன்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன. மிசௌரி தமிழ்ச்சங்க தமிழிசை விழா ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படும். மிசௌரி தமிழ்ச்சங்க பொங்கல் விழா ஒவ்வொரு வருடமும் சனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும். மிசௌரி தமிழ்ச்சங்க சித்திரை விழா ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கொண்டாடப்படும் மிசௌரி தமிழ்ச்சங்க முத்தமிழ் விழா ஒவ்வொரு வருடமும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படும். இயற் இசை நாடகத் தமிழாய் உறைந்திருக்கும் தீந்தமிழின் தீமினை பாரெங்கும் கமழச் செய்திடும் தமிழுக்கான திருவிழா முத்தமிழ் விழா மிசெளரி தமிழ்ச்சங்கத்தில் 2017-ஆம் ஆண்டு, முதன்முறையாக ’மகளிர் மட்டும்’ நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது. தமிழ்ச்சங்கத்தின் அனைத்துக் கலை நிகழ்ச்சிகளிலும் பெண்கள், தங்கள் குழந்தைகளின் நிகழ்ச்சிகளுக்காக அவர்களைக் கவனிப்பதிலேயே சுற்றிக் கொண்டிருப்பார்கள். இவை ஏதுமில்லாமல் ஒரு நிகழ்ச்சி, பெண்களுக்காகவே மட்டும் அவர்கள் பார்த்து, ரசித்து, கேட்டு, விளையாடி உற்சாகமாய்க் களிப்புற என்ற சிந்தனையில் தொடங்கப்பட்டதே ’மகளிர் மட்டும்’ . இந்நிகழ்வில் தோழிகள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்த அருமையான வாய்ப்பு. இனிமையான பாடல்களைப் பாடியும், நளினமாக ஆடியும், அருமையான நகைச்சுவைகளைச் சொல்லி சிரித்து மகிழ்ந்தும், யோகா,, உடல்நல, மனநலக் குறிப்புக்களைப் பகிர்ந்தும், சுறுசுறுப்பான விளையாட்டுகளில் பங்கு கொண்டும், உற்சாகத்துடன் ஆரவாரித்து மகிழ்கிறார்கள். பள்ளி நாட்களையும், கல்லூரி நாட்களையும் மலரும் நினைவுகளாகக் கொணரும் வண்ணம், பெண்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடும் நிகழ்ச்சியாக மகளிர் மட்டும் மலர்கிறது. இந்நிகழ்ச்சியில் ஒலி, ஒளிபரப்பு, புகைப்படம், காணொளி அமைப்பு, மேடை அலங்காரம் போன்ற அனைத்து வேலைகளையும் பெண்களே பகிர்ந்து கொண்டு எல்லாத் துறைகளிலும் பரிமளிக்கும் திறமை தங்களுக்கு உண்டு என நிரூபிக்கிறார்கள். வரும் காலங்களில், பங்குச் சந்தை நிர்வாகம் போன்றவறைப் பற்றி விவாதிக்கவும், குடும்ப மேம்பாட்டு நலன், சமுதாய நலன் போன்றவற்றை விவாதிக்கும் கருத்தரங்குகளை நடத்தவும் மகளிர் மட்டும் நிகழ்சிச்சியில் பல திட்டங்கள் உள்ளன. செயிண்ட்லூயிஸ் மட்டுமன்றி, பக்கத்து ஊர்களிலிருந்து தோழிகள் வந்து, கலந்து கொண்டு நட்பு பாராட்டுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மிசௌரி தமிழ்ச்சங்க கோடை உலா ஒவ்வொரு வருடமும் மே அல்லது சூலை மாதத்தில் கொண்டாடப்படும். ஊருக்குச் சற்றுத் தொலைவிலுள்ள ஒரு சோலைக்குச் சென்று, தனித்தனியாகவும் கூட்டங் கூட்டமாகவும் ஒரு பகல் சமைத்துண்டு மகிழ்ந்த விழா, பொழில் விளையாட்டு எனப்பட்டது. சோலையை அடைந்தபின், அடிசில் தொழிலில் (அடுக்களைப் பணி) ஈடுபட்டவரொழிந்த ஏனையரெல்லாம் வெவ்வேறு வினையாற்றிட வெவ்வேறிடஞ்சென்று விடுவர். ஆடவருள் பெரியோர் வேட்டையாடவும், சிறியோர் மரமேறுதல் காய்கனி பறித்துண்டல், விளையாடுதல் முதலிய வினை நிகழ்த்தவும் பிரிந்துவிடுவர். பெண்டிருள் மூத்தோர் அடிசில் தொழிலில் அமர, இளையோர், மலர் கொய்து மாலை தொடுக்கவும், பாவை புனைந்து பாராட்டி மகிழவும், ஊஞ்சலமைத்து உந்தியாடவும், சிற்றிலிழைத்துச் சிறுசோறு சமைக்கவும் ஆங்காங்கு அகன்றுவிடுவர். சிலர் கட்டமுது கொண்டு செல்வதுமுண்டு. அங்ஙனமாயின், அன்னார் அனைவரும் இன்ப விளையாட்டில் ஈடுபடுவர். நண்பகல் உணவுண்டபின், சில நாழிகை நேரம் இளைப்பாறி மாலைக் காலம் வீடு திரும்புவது இயல்பாகும். இத்தகு, பொழில் விளையாட்டு அல்லது பொழிலுலா வினை இளவேனிற்காலத்தில் மேற்கொள்வது தமிழர் மரபு. அத்தகு மரபுவழியில், கோடைதோறும் நம் சங்கம் கோடைப் பொழில்விழாவையும் நடத்தி வருகிறது. அனைவரும் பங்கு கொண்டு பெருமை கொள்ள வேண்டுமென்பதே சங்கத்தின் விழைவாகும்.கருத்தரங்கம்/பயிலரங்கம்என்ன காரணம் அப்படிச் செய்ய? இருக்கும் புரிதலின் போதாமைதான். ஒவ்வா நடத்தை எப்படித் தொலையும்? சிறந்த அறிவு பெருக வேண்டும். அறிவை எப்படி அடைய முடியும்? அனைவர் தாமும் பயில வேண்டும். நிறைய எவரும் அறிவதும் பயிலுவதும் எப்படி? நீள முயன்றால் முடியும். குறைகள் தீர முயல்வதெப்படி? கூட்ட மக்கள் கிளர்ச்சி கொள்ளல் வேண்டும். கறைகள் போகா திருப்பதென்ன? நல்லநல்ல வாய்ப்புகள் கிட்டாமைதான். ஆகவே, வாய்ப்புகள் கிட்டாமையைப் போக்கிடவும் நம்மவர் அறிவுத் தேடலில் கிளர்ந்தெழவும், சீர்மிகுந்த வல்லுநர் கொண்டு, திறம்மிகுந்த கலைஞர் கொண்டு, கருத்தரங்கம் பயிலரங்கம் போன்றவற்றை அவ்வப்போது நம் சங்கமானது நடத்தி வருகிறது. படைதிரண்டு வந்து பங்கேற்று பயன்கொண்டு மேன்மையுறுதல் போற்றத்தக்கதாகும். 301 Saint Andrews CtBallwinMissouri 63011E-mail:committee@motamilsangam.org


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !