உள்ளூர் செய்திகள்

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க இதழ் தென்றல் முல்லை

உலகில் பிறந்து சிறந்த பல மொழிகளுள், சிறந்தே பிறந்த எம் தாய் மொழியாம் தமிழன்னைக்கும், தமிழுறவுகளுக்கும் வணக்கம்! முதற்கண் எனதருமை தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு 2024 மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்! “மாற்றம் ஒன்றே மாறாதது”! கடந்த மூன்று இதழ்களிலும் (ஏப்ரல்-நவம்பர் 2023) புதிய பார்வையுடன், புதுமையான பல அம்சங்கள் அரங்கேற்றப்பட்டது. முதன்முறையாக பத்து இளம் ஆசிரியர்கள் ஆசிரியர் குழுவில் சேர்ப்பு ஒவ்வொரு இளம் ஆசிரியர்களுக்கும் குழந்தை வாசகர்களைக் கவரும் விதத்தில் தனித்தனி பகுதிப் பங்களிப்புகள் (இளம் சாதனையாளர் நேர்காணல், தமிழ் வார்த்தை விளையாட்டு, சொல் தேடல், புதிர், விடுகதைகள், பழமொழிகள், குறளோடு ஒரு கதை, படக் கதை, அறிவோம்! தெரிவோம்!, சமீபத்திய நிகழ்வுகள்)இளைய தலைமுறையினரை முன்னிறுத்தி இதழ் தயாரிப்பு நம் வட்டாரக் குழந்தைகளின் சாதனை அங்கீகரிப்பு படைப்பும் படைப்பாளியும்: வாசகர் பார்வை ஒவ்வொரு இதழையும் திறனாய்வு செய்யும் விதத்தில் “வாசகர் குரல்” இதன் தொடர்ச்சியாய் மற்றுமிரு புதிய அம்சங்கள் இவ்விதழ் முதற்கொண்டு அரங்கேற உள்ளன. பெண்மை.. பெருமை.. சாதனைப் பெண்மணிகள் அங்கீகரிப்பு தாய் மண்ணைத் தாண்டியும் தமிழ் வளர்ப்பில்.. என நம் வட்டாரத்துத் தமிழ் ஆர்வலர்களின் தமிழ்த்தொண்டு அங்கீகரிப்பு. சென்ற இதழில் கூறியது போல இவ்விதழும் இளம் எழுத்தாளர்களின் ஆக்கத்தாலும், சிந்தனையாலும், சுட்டிகளின் அருமையான படைப்புகளினாலும் மிகச் சிறப்பாய் வந்துள்ளது. இவ்விதழின் 48 பக்கங்களில் பெரும்பான்மையான சதவீதப் பங்களிப்பு நம் சுட்டிகளுடையது என்பதைப் பெருமையோடு பறைசாற்றுகிறேன். பல்சுவை இதழாய் இவ்விதழையும் தந்துள்ளோம், உங்களின் கருத்துகளை எங்களுக்குத் தெரிவியுங்கள். “வாசகர் குரல்” பகுதியில் உங்கள் கருத்துகள் அடுத்த இதழில் பிரசுரிக்கப்படும். இதழை சிறப்பாகக் கொண்டு வர உழைத்த தென்றல் முல்லை சக ஆசிரிய நண்பர்களுக்கும், சிறப்பான படைப்புகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் என் நன்றிகள். தொடர்ந்து உங்களின் சிந்தனைகள், படைப்புகள் மற்றும் கருத்துகளைthenral.mullai@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நமது தென்றல் முல்லை இதழுக்குத் தொடர்ந்து ஆதரவு தந்து வரும் நமது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், கொடையாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு எங்கள் தென்றல் முல்லை ஆசிரியர்க் குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றிகள். கவின்மிகு தமிழின் புகழ் தரணியெங்கும் பரவட்டும்! மனிதம் தழைக்கட்டும்! மீண்டும் அடுத்த இதழில் உங்களோடு பேசுகிறேன். தோழமையுடன்…முனைவர் பாலா குப்புசாமி, 'தென்றல் முல்லை' முதன்மை ஆசிரியர், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் அமெரிக்காதென்றல் முல்லை இதழைப் படிக்கக் கீழே சொடுக்கவும்:- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !