ADDED : ஜூன் 30, 2013 05:06 PM

* பல தெய்வ வழிபாட்டை விட, ஒரே தெய்வ வழிபாடே மனதை ஒருமுகப்படுத்த வழிவகுக்கும். பக்தியில் முன்னேற இதுவே சிறந்தவழி.
* தான் வழிபடும் தெய்வமே உயர்ந்தது என்று எண்ணிக் கொண்டு மற்றவர் வழிபடும் தெய்வங்களை நிந்திப்பது வேதத்திற்கு விரோதமானது.
* தியானத்தின் ஆற்றலை எளிதாக நினைக்காதீர்கள். தான் எண்ணியதை அடைவதற்கு தியானமே துணை செய்கிறது என்பதை அனுபவத்தில் மட்டுமே உணர முடியும்.
* 'வெளியே தள்ளினாலும், போக மாட்டோம்' என்று பிடிவாதம் செய்யும் தீய குணங்களை அகற்ற அதற்கு நேர் எதிரான நல்ல சிந்தனைகளை மனதில் பரவ விடுங்கள்.
* 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்பது திருக்குறள். நல்ல எண்ணம், உண்ணும் உணவை விடச் சிறந்தது.
* இன்று செய்ய வேண்டியதை நாளை செய்யலாம் என்று தாமதப்படுத்தினால், அது நடக்காமல் போக வாய்ப்புண்டு. இன்றே இப்போதே தொடங்குங்கள்.
- பாரதியார்