ADDED : ஏப் 24, 2015 12:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனம் எதை தீவிரமாகச் சிந்திக்கிறதோ, அதுவாகவே மாறும் தன்மை கொண்டது.
* கடவுளிடம் இருந்து பிரிந்து வந்துள்ள நாம், பிறவியின் முடிவில் அவரிடமே ஐக்கியமாக முயல வேண்டும்.
* பிறர் துன்பத்தைப் போக்க நம்மால் ஆன உதவியைச் செய்வது அவசியம்.
* ஆடம்பரமாக உண்பதும், உடுத்துவதும் மட்டுமே தரமான வாழ்வாகாது. இருப்பதில் திருப்தியுடன் வாழ்வதே சிறந்தது.
* எப்போதும் மனதில் அது வேண்டும், இது வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருப்பவனே பரமஏழை.
-காஞ்சிப்பெரியவர்