sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ரமணர்

/

உணவின்றி விரதம் வேண்டாமே!

/

உணவின்றி விரதம் வேண்டாமே!

உணவின்றி விரதம் வேண்டாமே!

உணவின்றி விரதம் வேண்டாமே!


ADDED : ஜூன் 05, 2011 11:06 AM

Google News

ADDED : ஜூன் 05, 2011 11:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* 'நான்' என்ற அகந்தையுடன் அனைத்து செயல்களையும் செய்கிறோம். உண்மையில் 'நான்' என்பது ஒரு சிறு கருவியே. உன்னை கடவுளாக எண்ணாதே. இதை உணர்ந்து விட்டால், அகந்தை நம்மிடமிருந்து வெளியேறிவிடும்.

* ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாடவேண்டும். இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை.

* கடவுளும் குருவும் முக்தி அடைவதற்கான வழியை மட்டும் தான் காட்டுவார்கள். நாம் தான், அவர்கள் காட்டிய வழியில் சென்று முக்தி பெற வேண்டும்.

* நீ ஒருவருக்கு கொடுத்தால் அது உனக்கே கொடுத்துக் கொண்டதாகும். நீ ஒருவரைத் திட்டினாலோ, ஏமாற்றினாலோ உன்னையே திட்டியதும், ஏமாற்றிக் கொண்டதுமாகும். நீ பிறருக்கு தீங்கு செய்யும் போது, உனக்கே தீங்கு செய்து கொள்கிறாய். ஏனெனில் பிறர் வேறு, நீ வேறல்ல.

* உண்ணாவிரதம் என்பது ஒரு நோன்பு, அது மனதளவில் மட்டுமே இருக்க வேண்டும். உணவை மறுத்து பட்டினி இருந்தால், அது மனதைப் பாதிக்கச் செய்யும். ஆன்மிகவிரிவுக்கு சாத்வீகமான உணவு அவசியம்.

- ரமணர்



Trending





      Dinamalar
      Follow us