
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எண்ணம் உயர்ந்ததாக அமையுமானால் உலகமே தெய்வீகமாக காட்சி தரும்.
* நீ நீயாகவே இரு. இருப்பது எப்போதும் உன்னிடமே இருக்கும். நீ இழக்க வேண்டியது அகந்தை மட்டுமே.
* எண்ணங்களை அடக்க விழிப்புணர்வு தேவை. இல்லாவிட்டால் துாக்கம் வந்து விடும்.
* எண்ணத்தின் ஆற்றல் வீணாவதில்லை. ஒவ்வொரு எண்ணத்திற்கும் பயன் விளைந்தே தீரும்.
* மவுனமாக இருந்தாலே போதும். எல்லா நல்ல உபதேசங்களும் உனக்கு கிடைத்து விடும். அருளின் உயர்ந்த வடிவம் மவுனமே.
- ரமணர்