ADDED : ஜூலை 11, 2017 09:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ருசி, பேச்சு இரண்டும் நாக்கு சம்பந்தப்பட்டது. நாக்கை கட்டுப்படுத்திக் கொண்டால் வாழ்வில் எல்லாம் நலமாகும்.
* ஆடம்பரம் என்பது அரக்க குணம். ஆடம்பரமாக வாழ எண்ணினால் மனதில் வெறுப்பு வளரத் தொடங்கி விடும்.
* மனிதனுக்கு மட்டுமே பகுத்தறிவு வழங்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி உன்னை நீயே மேம்படுத்திக் கொள்.
* கடந்த காலம் வரப் போவதில்லை. வருங்காலம் நம் கையில் இல்லை. நிகழ்காலத்தை நல்ல முறையில் பயனுள்ளதாக்கிடு.
* பிறர் போற்றுதலையும், துாற்றுதலையும் பொருட்படுத்த வேண்டாம். செய்யும் கடமையில் மட்டும் கருத்துடன் ஈடுபடு.
* நீராடுவது, துாய ஆடை இவை எல்லாம் புறத்துாய்மைக்கு உதவும். ஆனால், சுயநலமற்ற சேவை ஒன்றே அகத்துாய்மைக்கான வழி.
சாய்பாபா