
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கல்வி என்பது விவேகமானதாகவும், நன்மையை உணர்ந்தறியும் அறிவை வளர்ப்பதாகவும், சமூகத்திற்கு நன்மை தருவதாகவும் இருக்க வேண்டும்.
* பெண்கள் ஆண்களைப் போல படிப்பது நல்லது தான். திறமைக்கேற்ப வேலைக்குச் செல்வதிலும் நன்மையே. ஆனால், கட்டுப்பாடுஇல்லாமல், சுதந்திரமாக செயல்படுவது நல்லதல்ல.
* நாம் ஒவ்வொருவரும் 'நான்' என்ற அகந்தையை அகற்றுவதோடு, எல்லா உயிர்களிலும் கடவுளைக் காண முயல வேண்டும்.
* பக்தி என்பது உள்ளத்திலிருந்து வருவதாக இருக்கவேண்டும். வெறும் உதட்டளவில் இருப்பது கூடாது. அப்படிப்பட்டவருக்கு கடவுளின் அருள் நிச்சயமாக கிடைக்கும்.
* ''எல்லாமே நீ தான், எனக்கு என்று எதுவும் இல்லை'' என்று தன்னையே கடவுளிடம் சரணடைந்து விடும் பக்தியே உயர்வானது.
- சாய்பாபா