ADDED : பிப் 23, 2015 08:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒழுக்கத்தில் உறுதி கொள்ளுங்கள். தைரியத்தை ஒருபோதும் இழக்காதீர்கள்.
* கோழையே வாழ்வில் பாவத்தைச் செய்கிறான். தைரியசாலிகள் மனதால் கூட பாவம் செய்ய முடியாது.
* சுயநலமே ஒழுக்கக் கேடு. சுயநலம் இன்மையே நல்லொழுக்கம். இதுவே ஒழுக்கத்திற்கான இலக்கணம்.
* எப்போதும் உற்சாகமுடன் இருப்பதே ஆன்மிக வாழ்வில் ஈடுபடுவதற்கான முதல் அறிகுறி.
* எளியவர்களுக்கு சேவை செய்பவன் கடவுளுக்கே சேவை செய்த பாக்கியத்தை அடைகிறான்.
-விவேகானந்தர்