sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/குருபெயர்ச்சி பலன்கள்/துலாம்

குருபெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

குருப்பெயர்ச்சி பலன்கள் : துலாம்
25 மே 2026 to 07 ஜூன் 2027

முந்தைய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

துலாம்துலாம்

சித்திரை 3,4: வளமுடன் வாழ்வீர்கள்

ரத்தக்காரகன் யுத்தக்காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1,2 ம் பாதங்களான கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதங்களான துலாம் ராசியில்  பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். எந்த ஒன்றிலும் தைரியத்துடனும் அதே நேரத்தில் திட்டமிட்டும் செயல்பட்டு வெற்றியை அடைபவர்கள் நீங்கள்.

சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 11 ம் வீடான லாப ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 முதல் அதிசாரமாக விரய ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால், மே 26 முதல் வாழ்க்கை வளமாகும். எடுத்த காரியங்கள் வெற்றியாகும். செல்வம் செல்வாக்கு அந்தஸ்து உயரும். வீடு வாகனம் பட்டம் பதவி என்ற கனவுகள் நனவாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உடல் நிலையில் முன்னேற்றம், மனநிலையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அக். 20 முதல் விரய ஸ்தானமான 12 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால், பல வகையிலும் செலவு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும். சாதாரணமாக நடத்தி முடித்த வேலைகளையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். செய்துவரும் தொழிலில் தடைகளும் நெருக்கடிகளும் ஏற்படும். பார்த்துவரும் வேலையிலும் பிரச்சனைகள் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். அதனால் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலையும் உருவாகும்.
சித்திரை 3,4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் ஜீவன ஸ்தானமான 10 ம் இடத்திலும், அக். 20 முதல் 11ம் வீடான லாப ஸ்தானத்திலும் குரு  சஞ்சரிப்பதால், மே 26 முதல், செய்து வரும் தொழிலில் திடீர் நெருக்கடிகள் ஏற்படும். முதலீட்டிற்கேற்ற ஆதாயம் இல்லாமல் போகும். பார்த்துவரும் வேலையில் பிரச்சனைகளும் எதிர்பாராத இடமாற்றமும் ஏற்படும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சியில் தடைகள் தோன்றும். அக். 20 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் கனவுகளை நனவாக்குவார். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார். பணப்புழக்கத்தை உண்டாக்குவார். வாழ்க்கையில் ஏற்பட்ட போராட்டங்களை இல்லாமல் செய்வார். வியாபாரம் மற்றும் தொழிலில் ஆதாயத்தை அதிகரிப்பார். பெரியோரின் ஆதரவை ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றத்தையும் பதவி உயர்வையும் வழங்குவார். செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவார். 

உங்கள் நட்சத்திராதிபதியான செவ்வாய் குருவிற்கு நட்பானவர் என்பதால் சோதனையான நேரத்திலும் உங்களைப் பாதுகாப்பார் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஷேமம் மற்றும் ஸாதக தாரைகள் என்பதால் பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும்போது நன்மைகள் அதிகரிக்கும். வாழ்க்கை வளமாகும்.

சஞ்சாரம், பார்வை பலன்

குரு பகவான் தான் பார்க்கும் இடங்களுக்கு யோகமான பலன்களை வழங்கிடக்கூடியவராவார். சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 3,5,7 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், உங்கள் வாழ்வில் இருந்த சங்கடங்கள் நெருக்கடிகள் யாவும் விலகும். எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழும் நிலை உருவாகும். தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். அக். 20 முதல், 4,6,8 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவிற்கேற்ற வருமானம்வரும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள், வம்பு வழக்குகள் முடிவிற்கு வரும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்ப்பு பகை நோய் நொடி என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். வேலைப் பார்க்கும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். 

சித்திரை 3,4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 2,4,6 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம், பிரச்சனைகள் விலகி நிம்மதி உண்டாகும். உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட போட்டி எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். மனதில் இருந்த சங்கட நீங்கும். பல வழியிலும் வருமானம் வர ஆரம்பிக்கும். வாழ்வில் முன்னேற்றப் பாதைத் தெரியும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவுகளின் ஆதரவு அதிகரிக்கும். நோய்கள் தீரும். மகிழ்ச்சி நிலைக்கும். 
அக். 20 முதல் 3,5,7 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்க முடியும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வேலையில் ஏற்பட்ட மறைமுக எதிர்ப்பு விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் வரும். வேலை நிமித்தமாக பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேரக்கூடிய நிலை உருவாகும். சகோதர சகோதரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். செய்து வரும் தொழிலை விரிவு செய்வீர்கள். சோதனைகளை மட்டுமே சந்தித்து வந்தவர்களுக்கு சாதனைகள் புரியும் வாய்ப்பு உண்டாகும்.

அஸ்தமனம், வக்ர காலங்கள்

ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். 

பொதுப்பலன்

சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு லாப குருவும், சத்ரு ஜெய ஸ்தான ராகுவும், நவ. 13 முதல் கேதுவும் யோகப் பலன்களை வழங்குவர். 3,4 ம் பாதத்தினருக்கு சத்ரு ஜெய ஸ்தான சனியும், அக். 20 முதல் குருவும், இக்காலம் முழுவதும் குருப்பார்வைகளும் நன்மைகளை உண்டாக்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். செல்வம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் நிம்மதி தொழிலில் லாபம், உத்தியோகத்தில் முன்னேற்றம் என ஏற்படும்.

தொழில்

எந்த ஒன்றிலும் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள் நீங்கள். செய்யும் தொழிலிலும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு இக்காலம் யோகமான காலமாகும். 
ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல் தயாரிப்பு மற்றும் விற்பனை, மெடிக்கல், மருத்துவம் சார்ந்த தொழில்கள், உணவகம், விவசாயம் சார்ந்த தொழில்கள், ரசாயன பொருட்கள், குடிநீர் சார்ந்த தொழில்கள் மற்றும் விற்பனை, பப்ளிகேஷன், ஷேர் மார்க்கெட், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், ஆடை ஆபரணம், காலண்டர் நோட்டுப் புத்தகம் தயாரிப்பு மற்றும் விற்பனை, தனியார் பள்ளிகள், ஏ.ஐ., யூடியூப், சின்னத்திரை, சினிமா மற்றும் அதைச்சார்ந்த தொழில்கள் லாபம்தரும்.

பணியாளர்கள் 

வேலையில் நிம்மதி இல்லை, எதிர்பார்த்த ஊதியம் இல்லை, சலுகைகள் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டு வந்தோரின் நிலை மாறும். நிர்வாகத்தின் ஆதரவு ஏற்படும். எதிர்பார்த்த பொறுப்பும் சலுகைகளும் கிடைக்கும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்டு வந்த இடமாற்றம் பதவி உயர்வு தேடிவரும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.

பெண்கள்

எந்த ஒன்றிலும் நிம்மதி இல்லை, எதை எடுத்தாலும் பிரச்சனை போராட்டம் என்றிருந்த நிலை மாறும். செல்வாக்கு உயரும். சொல்வாக்கிற்கு மரியாதை உண்டாகும். படிப்பு வேலை திருமணம் என்ற அவரவர் கனவு நனவாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். எதிர்பார்த்த வேலைக்கிடைக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழக்கூடிய நிலை உருவாகும்.

கல்வி 

படிப்பின் மீது அக்கறை ஏற்படும். தவறான நண்பர்களை விட்டு விலகுவீர்கள். பொதுத்தேர்வு போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு என்றும் செல்வீர்கள்.

உடல்நிலை

பரம்பரை நோய், தொற்று நோய், விபத்து என்று மருத்துவ மனைகளுக்கு சென்று வந்தோரின் நிலையில் மாற்றம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். நோயினால் ஏற்பட்ட பயம் விலகும். சிலருக்கு இயற்கை வைத்தியம் பலன் தரும்.

குடும்பம்

குடும்பத்தில் இருந்த சங்கடமான நிலை மாறும் நீண்டநாள் கனவுகள் நனவாகும். சொந்த இடம் வீடு வாகனத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சச்சரவுகள் தீரும். பொருளாதார நிலை உயரும். பிள்ளைகளின் கல்வி திருமணம் என்ற எண்ணம் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.

பரிகாரம் 

சங்கர நாராயணரை வழிபட சங்கடங்கள் விலகும். வேண்டுதல் பலிதமாகும்.

சுவாதி: தொட்டது துலங்கும்

அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன், யோகக்காரகன் ராகு அம்சத்தில் பிறந்த நீங்கள் பெரிய பெரிய திட்டங்கள் தீட்டி செயல்படக் கூடியவர்களாக இருப்பீர்கள். எந்தவொரு வேலையைக் கையில் எடுத்தாலும் அதை முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். நினைத்ததை சாதிப்பதில் வல்லவர்களான உங்களுக்கு மே 26 முதல் உங்கள் தொழில் ஸ்தானமான 10 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு, அக். 20 முதல் உங்கள் ராசிக்கு 11 ம் வீடான லாப ஸ்தானத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கிறார்.

மே 26 முதல் ஜீவன ஸ்தானமான 10 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு, இதுவரை நீங்கள் அடைந்துவந்த நற்பலன்களில் பின்னடைவை ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறுகள் மேல் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு அதன் காரணமாக எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். சிலருக்கு மெமோவும் வரும். செய்து வரும் தொழிலில் திடீர் நெருக்கடிகள் ஏற்படும். பொருட்கள் தேக்கமடையும். முதலீட்டிற்கேற்ற ஆதாயம் இல்லாமல் போகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சியில் தடைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்க மேற்கொண்ட வேலைகள் இழுபறியாகும். அக். 20 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, முன்பிருந்த நெருக்கடிகளை நீக்குவார். உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார். கணவன் மனைவிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்துவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பார். புதிய சொத்து வாங்க வைப்பார். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட போராட்டங்களை இல்லாமல் செய்வார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றத்தையும் பதவி உயர்வையும் வழங்குவார். திருமண வயதினருக்கு திருமணத்தை நடத்தி வைப்பார். குழந்தை பாக்யத்திற்காக தவம் இருந்தவர்களுக்கு குழந்தை வரத்தை வழங்குவார். பட்டம், பதவி என்ற கனவுகளை நனவாக்குவார். அவர் சஞ்சரிக்கும் புனர்பூசம், ஆயில்யம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸாதகம் மற்றும் ஷேம தாரைகள் என்பதால் புனர்பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் நன்மைகளை அதிகரிப்பார். உங்கள் வாழ்க்கையை மேலும் வளமாக்குவார்.

சஞ்சாரம், பார்வை பலன்

குரு பகவான் ஒரு ராசிக்குள் சஞ்சரிக்கும்போது தன் 5,7,9ம் பார்வைகளால் மூன்று இடங்களை சுபத்துவப்படுத்துவார். சஞ்சார நிலை பாதகமாகவே இருந்தாலும் அவர் பார்க்கும் இடங்கள் மேன்மையடையும் என்பது ஜோதிட விதி. அந்த ரீதியில், மே 26 முதல் 2,4,6 ம் இடங்களுக்கு குருவின் பார்வைகள் கிடைப்பதால் குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். சிலர் வசதியான வீட்டிற்கு இடம் மாறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கடன் தொல்லை விலகும்.  உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகி மகிழ்ச்சியான நிலை உருவாகும். விருப்பங்கள் பூர்த்தியாகும். புதிய வாகனம் வாங்கும் கனவு நனவாகும். தொழிலில் ஏற்பட்ட போட்டி எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.
அக். 20 முதல் 3,5,7 ம் இடங்களுக்கு குருவின் பார்வைகள் கிடைப்பதால், தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுக்கும் வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட வழக்கு உங்களுக்கு சாதகமாகும். வேலையில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்குவரும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். திருமண வயதினர் கழுத்தில் மணமாலை ஏறும். வேலையின் காரணமாக பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேரக்கூடிய நிலை உருவாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், அக் 20 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும், நவ. 13 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும், குருவின் பார்வைகளும் உங்கள் வாழ்வை வளமாக்கும். பொன், பொருள், புகழுடன் நடைபோட வைக்கும். ஆரோக்கியம் சீராகும். வழக்கு வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

தொழில்

எடுத்த வேலையில் வெற்றியினை அடைய வேண்டும். செய்யும் தொழிலில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு, இதுவரை பல்வேறு முயற்சிகள் செய்தும் போட்ட பணத்தைக்கூட எடுக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டு வந்த நிலை மாறும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் வியாபாரம், ரசாயனம், ஹோட்டல், திருமண மண்டபம், விடுதி, ட்ராவல்ஸ், பில்டிங் டிசைனிங், டெக்கரேஷன், ஆடை வணிகம், ஜுவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, எக்‌ஸ்போர்ட், மேன்பவர் ஏஜன்சி, சினிமா, தொலைக்காட்சி, வலைதளம் தொழிலில் ஈடுபட்டிருப்போருக்கு ஆதாயம் கூடும்.

பணியாளர்கள் 

கடுமையாக உழைத்தும் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்று வருத்தப்பட்டு வந்தவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு ஏற்படும். சிலர் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்வீர்கள். அரசு ஊழியர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.

பெண்கள்

குடும்பத்திலும் வெளியிலும் நெருக்கடிகளை சந்தித்து வந்த நிலை மாறும்.  கணவருடன் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும். பொன் பொருள் சேரும். உறவினர் ஆதரவு கிடைக்கும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

கல்வி 

உயர் கல்விக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். மேற்கல்விக்காக சிலர் வெளிநாடு வெளிமாநிலம் என்றும் செல்வீர்கள், மருத்துவம், பொறியியல், அக்ரி, சட்டம் என்று படிக்க நினைத்தவர்கள் கனவு நனவாகும்.

உடல்நிலை

ருண ரோக ஸ்தானத்தில் ஆயுள்காரகன் சனி சஞ்சரிப்பதால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியம் மேம்படும். சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.

குடும்பம்

குடும்பத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும் தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும் பொன் பொருள் வீடு வாகனம் என வாழ்க்கை வளமாகும் பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.

பரிகாரம்  

நாகநாத சுவாமியை வழிபட சங்கடங்கள் விலகும். வேண்டுதல் பலிதமாகும்.

விசாகம் 1,2,3: உழைப்பால் முன்னேற்றம்

மங்களக்காரகன், ஞானக்காரகனான குரு பகவானை நட்சத்திர அதிபதியாக நீங்கள் கொண்டிருந்தாலும், 1,2,3 ம் பாதங்களான துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4 ம் பாதமான விருச்சிகம் ராசியில்  பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர். சமூகத்தில் தனித்துவத்துடன், பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வருபவர்கள் நீங்கள். எங்கு இருந்தாலும் அங்கு உங்கள் வார்த்தைக்கு தனி மதிப்பிருக்கும்.

விசாகம் 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் தொழில்  ஸ்தானமான 10 ம் இடத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 முதல் 11ம் வீடான லாப ஸ்தானத்தில் குரு அதிசாரமாக சஞ்சரிப்பதால், மே 26 முதல், செய்துவரும் தொழிலில் நெருக்கடியும், போராட்டமும், பார்த்துவரும் வேலையில் பிரச்சனைகளும், பண வரவில் தடைகளும், உறவினர்களுடன் இடைவெளியும், ஆரோக்கியத்தில் சங்கடங்களும் ஏற்படும். முதலீட்டிற்கேற்ற ஆதாயம் இல்லாமல் போகும். அக். 20 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் நீங்கள் நினைத்த வேலைகள் நினைத்தபடி நடந்தேறும். வியாபாரம் மற்றும் தொழில் வளர்ச்சி அடையும். பணவரவு அதிகரிக்கும். மதிப்பு, கௌரவம், செல்வாக்கு உயரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். தடைபட்ட பதவி உயர்வு தேடிவரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். விசாகம் 4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் பாக்ய ஸ்தானமான 9 ம் இடத்திலும், அக். 20 முதல் ஜீவன ஸ்தானமான 10 ம் வீட்டிலும் குரு சஞ்சரிப்பதால், மே 26 முதல் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்டநாள் கனவுகள் நனவாகும், பட்டம், பதவி, அந்தஸ்து, செல்வாக்கு, சொத்து, சுகம் எல்லாம் தேடிவரும். பொன் பொருள் சேரும், குடும்பத்திலும் வேலையிலும் நிம்மதியான நிலை ஏற்படும். அக். 20 முதல் பொருளாதார நெருக்கடி, உத்தியோகத்தில் பிரச்சனை, தொழிலில் மந்தமான நிலை ஏற்படும்.

உங்கள் நட்சத்திராதிபதியே குரு என்பதால் உங்களுக்கு சங்கடங்கள் வரும்போதெல்லாம் அவரே உங்களைப் பாதுகாப்பார் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஷேமம் மற்றும் ஸாதக தாரைகள் என்பதால் பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும்போது நன்மைகள் கூடும். வாழ்க்கை வளமாகும்.

சஞ்சாரம், பார்வை பலன்

குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தைக்கேற்ப அவர் சஞ்சரிக்கும் இடங்களுக்கு எதிர்மறையான பலன்களை வழங்கினாலும் பார்க்கும் இடங்களுக்கு சுபிட்சத்தையே ஏற்படுத்துவார். விசாகம் 1,2,3, ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 2,4,6 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். பணம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் மேன்மை உண்டாகும். ஆரோக்கியம் சீராகும். நோய்கள் விலகும். விரோதிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும் வழக்குகள் சாதகமாகும்.
அக். 20 முதல் 3,5,7 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், உங்களிடம் புதிய நம்பிக்கை உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழில் புரிவோருக்கு பணியாளர் ஆதரவு கிடைக்கும். பணம், புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்ததை நடத்திக் கொள்ள முடியும்.  பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் அமையும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.  உயர் கல்வி கனவு நனவாகும்.
விசாகம் 4 ம் பாதத்தினருக்கு, மே 26 முதல் ஜென்ம ராசிக்கும், 3, 5 ம் இடங்களுக்கும் குருப்பார்வை உண்டாவதால் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பட்டம் பதவி தேடிவரும்.  நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும். அக். 20 முதல் 2,4,6 ம் இடங்களுக்கு குருப்பார்வை உண்டாவதால், குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கி நிம்மதியான நிலை உண்டாகும். கையில் பணம் புரளும், சேமிப்பு உயரும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு வம்பு வழக்கு என்றிருந்த நிலை மாறும். 

விசாகம் 1,2,3 ம் பாதத்தினருக்கு லாப கேதுவும், 6 ம் இட சனியும், அக். 20 முதல் லாப குருவும், 4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் பாக்ய குருவும்,  நவ. 13 முதல் சகாய ராகுவும் யோகப் பலன்களை வழங்குவர். குருப்பார்வைகள் நன்மைகளை வழங்கும் என்பதால் குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கள். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

தொழில்

தெளிவான முடிவெடுத்து திட்டமிட்டு செயல்படக்கூடிய உங்களுக்கு, தொழில் மீதான அக்கறை அதிகரிக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் ஏஜன்சி, பங்கு வர்த்தகம், ரசாயன தொழில்கள், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில்கள், ஸ்பேர்பார்ட்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை, இன்ஜினியரிங், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், திருமண மண்டபம், விடுதி, ட்ராவல்ஸ், பில்டிங் டிசைனிங் அண்ட் டெக்கரேஷன், ஆடை வணிகம், ஜுவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, கம்ப்யூட்டர், குளிர்பானம், மினரல் வாட்டர், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், நவீன சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை வளர்ச்சி அடையும்.

பணியாளர்கள் 

வேலைப்பார்க்கும் இடத்தில் வேலைபளு அதிகரித்தாலும் அதற்குரிய சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு தற்போதுள்ள இடத்தை விட வேறு இடத்தில் எதிர்பார்த்த ஊதியத்துடனும் சலுகைகளுடனும் தகுதிக்குரிய வேலைக்கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். தடைபட்ட இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்

பெண்கள் 

எடுத்த வேலைகளை முடிப்பதில் வல்லவரான உங்களுக்கு, உடல்நிலையும் மனநிலையும் மேம்படும். குடும்பத்தில் மதிப்பு கூடும். சிலருக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். கணவரின் ஆதரவு கிடைக்கும். கையிருப்பு கூடும். பொன் பொருள் சேரும். உறவுகள் மத்தியில் மதிப்புடன் வாழக்கூடிய நிலை உருவாகும்.

கல்வி 

குரு பகவானின் அருள் பெற்ற உங்களுக்கு இயல்பாகவே படிப்பின் மீது அக்கறையும் ஆர்வமும் இருக்கும். பொதுத்தேர்வில் போட்டித்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். பொறியியல், மருத்துவம், சட்டம் என்று விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை

உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மருத்துவச்செலவு குறையும். மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கி வந்தவர்கள் நிலை மாறும். ஆரோக்கியமாக நடை போடக்கூடிய நிலை உருவாகும்.

குடும்பம்

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய அக்கறை அதிகரிக்கும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு சிலருக்கு நனவாகும். நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும்.  பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். சுப நிகழ்ச்சி நடந்தேறும்.

பரிகாரம் 

ஆபத் சகாயேஸ்வரரை வழிபட நன்மைகள் நடந்தேறும். வேண்டுதல் பலிதமாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் குருப்பெயர்ச்சி பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us