sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

/

மகரம்

/

மகரம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் : மகரம்
12 ஏப் 2021

முந்தய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

மகரம்உத்திராடம்,2,3,4 ம் பாதம்: பயணம் மூலம் வருமானம் பெருகும்

உங்களை முகஸ்துதி பாடி ஏமாற்றுபவர்களை நல்லவர்கள் என இத்தனை காலம் நம்பினீர்கள். இனி மனிதர்களை இனம் கண்டு கவனமாயிருப்பீர்கள்.  குடும்பத்தில் சந்தோஷமான பொறுப்புகள் அதிகமாகி உங்களை மகிழ்விக்கும்.  ‘மனதில் நிலவி வந்த லேசான விரக்தி காணாமல் போகும்.  
நிதி:
ணவரவு அதிகப்படும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் நிதி பற்றி எடுத்த முயற்சிகள் கைகூடும். சம்பாதிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். இந்த ஆண்டு நிறையப் பயணங்கள் மேற்கொண்டு அதன் மூலம் வருமானம் அதிகரிக்கும். வரும் பணத்தில் பெரும்பகுதி சேமிக்க முயல்வது நல்லது.
குடும்பம்:
தந்தையுடன் அனுசரித்துச் செல்ல ஆரம்பிப்பதால் குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். குழந்தைகளின் வாழ்வில் சந்தோஷ தருணங்கள் உண்டு. யாரேனும் ஒருவருக்குக் காதல் திருமணம் நிச்சயமாகும். இணக்கமான பாசம் நிலவும்.
கல்வி:
வெற்றிகளும் வாய்ப்பும் அதிகரித்து அவை எதிர்கால முன்னேற்றத் திற்கான அடித்தளமாக அமையும். வெளி மாநிலம் அல்லது வெளிநாட்டில் போய்த் தங்க வேண்டியிருக்கும். குளிர் தேசங்களுக்குச் செல்ல வாய்ப்பு உண்டு. திடீர் ஏற்பாடுகள் நிகழும்.
பெண்கள்:
வேலைக்கு செல்லும் இளம்பெண்கள் புதிய இரண்டு சக்கர வண்டி வாங்குவீர்கள்.சுயதொழில், பகுதிநேர தொழில் மூலம் உபரி வருமானம்  வரும். வாழ்க்கைத்துணைவருக்குப் பக்கபலமாக இருந்து செயல்படுவீர்கள்.
உடல் நிலை:
சிறிய உபாதை வந்தாலும் சரியாகச் சிறிது காலம் பிடிக்கும். அதற்குள் பொறுமை இழக்க வேண்டாம். வழக்கமான மருத்துவரையோ அல்லது மருத்துவ முறையையோ மாற்ற முற்பட்டு நல்ல பலன் பெறுவீர்கள்.
தொழில்/பணி:
சில கூடுதல் பொறுப்புக்களை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள்.அவற்றைச் செவ்வனே முடித்து நல்ல பெயர் எடுப்பது உங்கள் கையில்தான் உள்ளது. பணியில் நேர்மையற்ற செயல் செய்வதற்கு யாரேனும் தூண்டினால், கோடி கொடுத்தாலும் செய்ய வேண்டாம். பிற்காலத்தில் அது வெளிப்படும்.

பரிகாரம்:
செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து அம்பிகையை வணங்கினால் நன்மை உண்டு.

திருவோணம்: சந்தோஷ சம்பவங்கள் நிகழும்.

பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். பெண்களுக்கு புத்திசாலித்தனமான பேச்சின்மூலம் வெற்றி உண்டாகும். கோபத்தாலும் பொறாமையாலும் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். இணைப்பது  பற்றி சிந்தித்துப் பிறகு செய்யுங்கள். சந்தோஷ சம்பவங்கள் நிகழும்
நிதி:
பணவரவு முன்பைவிட ஓரளவு திருப்தி தரும். பணியில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். ஓவர் டைம், போனஸ் போன்ற வகைகளில் அதிக வருமானம் ஈட்டுவீர்கள். அதை மகிழ்ச்சியுடன் செலவிட்டுவிட வேண்டாம். கொஞ்சமாவது சேமிக்கப்பாருங்கள். இந்த வருடம் செலவும் இருக்கும்.
குடும்பம்:
குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். இந்த விஷயத்தில் நீங்கள் விட்டுக்கொடுப்பீர்கள். ஆனால் உங்கள் வாழ்க்கைத்துணையும் அதைப் புரிந்த கொள்வதால் ஈகோ பிரச்னை வராது.
கல்வி:
அநாயாசமாகப் படித்துவிட்டுப் பொழுதுபோக்கில் கவனம் செலுத்தினால் ஓரளவே பலன் கிடைக்கும். நன்கு முயன்று நல்லபடியாய்ப் படித்தால் அதன் பலனை ஆயுள் முழுக்க மகிழ்ச்சியுடன் அனுபவிக்கப்போகிறீர்கள். நல்ல வேளையாக ஆசிரியர்களுக்கு உங்களைப் பிடிக்கும்.

பெண்கள்:
எதையும் சற்று நிதானித்து யோசித்த பிறகே செய்வது நல்லது. மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்னை உண்டாகலாம். கவனமாக இருங்கள். அலுவலகத்தில் மிகுந்த உயர்வடைவீர்கள். பாராட்டுவார்கள்.
உடல் நிலை:
ஆரோக்யம் பற்றி அலட்சியம் கட்ட வேண்டாம். சிறிய பிரச்னையைப் பெரிதுபோல் கற்பனை செய்துகொண்டாலும் பரவாயில்லை. அதற்கேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அஜீரணக் கோளாறுகள் ஏற்படக்கூடும்.
தொழில்/பணி:
கலைத்துறையினருக்கு நிறைய வாய்ப்புகள் வரும். அதற்கேற்ற வருமானம் வருவது சந்தேகமே. தொழில் அல்லது வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பதவி உயர்வுடன் கூடிய மாற்றம் இருக்கும். புதிய நிறுவனத்தில்  நல்ல வேலையில் சேருவீர்கள். பணி நிரந்தரம் சம்பந்தமாக நல்ல செய்தி வரும்.

பரிகாரம்:
திங்கள் கிழமைகளில் சிவனை வழிபட்டால் நன்மை அடைவீரகள்.

அவிட்டம்,1,2 ம் பாதம்: மனதில் நிம்மதி  உண்டாகும்.
கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உதவியும் கிடைக்கும். மனதில் நிம்மதி  உண்டாகும்.  பணவரவு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். அனைத்திலும் தாமதங்கள் ஏற்பட்டாலும் எதிர்ப்புகள் நீங்கி எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.  விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள்.
நிதி:
நீண்ட  தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகி நிதிநிலை உயரும். கடன் பிரச்னைகள் குறையும். பலனடைவதற்குமுன் சோர்வு ஏற்பட்டாலும் பிறகு மகிழ்ச்சி வரும்.  
குடும்பம்:
தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது உத்தமம். விமர்சனங்கள், வாக்குவாதம், வாக்குறுதி  வேண்டாம். குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். வெல்ல நினைப்பதைவிட குடும்ப அமைதியைக் காக்க நினைப்பது முக்கியம்.
கல்வி:
வெற்றி பெற நிறையப் பாடுபட வேண்டும். ஞாபக மறதியை வெற்றி கொள்ள தீவிர பயிற்சி தேவை. இயற்பியல், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவர்கள் முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.
பெண்கள்:
பிறந்த வீட்டினரின் அன்பால் திக்குமுக்காடிப்போவீர்கள். ஈகோவை சற்றுத் தள்ளி வைக்க வேண்டும். ரகசியம் காப்பாற்றிக் குடும்பத்திற்கு நல்ல பெயர எடுத்துக் கொடுப்பீர்கள். புகுந்த வீட்டினரின் பாராட்டுக் கிடைக்கும்.
உடல் நிலை:
முன் ஜாக்கிரதை தேவை. சருமம் சம்பந்தமான சிறு தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உரிய சிகிச்கைமூலம் குணமடைவீரகள். நீங்கள் நினைத்த வேகத்தில் சரியாகாவிட்டாலும் முற்றிலும் சரியாகும்.
தொழில்/பணி:
நீங்களாகக் கற்பனை செய்து கொண்ட பிரச்னைகளால் அலைச்சல், சோர்வு, விரக்தி ஏற்பட அனுமதித்துக் கொள்ளாதீர்கள்.. விருப்ப ஓய்வு பெறுவது சம்பந்தமான எண்ணங்கள் மனதில் உதயமாகும். தொழிற்சங்க  விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருப்பது உத்தமம்.

பரிகாரம்:
கார்த்திகை விரதம் மேற்கொண்டு கந்தனைத் துதித்தால் கஷ்டம் விலகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us