sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

/

மகரம்

/

மகரம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் : மகரம்
15 ஏப் 2022

முந்தய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

மகரம்உத்திராடம் 2, 3, 4 பாதம்: கிடைத்தது எதையும் சாமர்த்தியமாக தக்க வைத்துக்கொள்வதில் திறமையுடைய உங்களுக்கு இந்த புத்தாண்டில் அனைத்து கிரக சஞ்சாரமும் சாதகம் தரும் வகையில் இருக்கிறது. பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். செவ்வாய் சஞ்சாரம் இட மாற்றத்தை ஏற்படுத்தும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம். தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட குறைவான லாபம் தரும். ஆனால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்கள் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் நீடித்து வந்த ஆரோக்கிய குறைபாடு பூர்த்தியாகும். விருந்தினர் வருகை இருக்கும். பெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் தேடி வரும். அரசியல் துறையினருக்கு உங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மை அதிகமாக கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது.
பரிகாரம்: வாராகியை வணங்கி வர முன்னேற்றம் உண்டாகும்.

திருவோணம் : தன்னம்பிக்கையுடன் செயல்படும் நீங்கள் இந்த புத்தாண்டில் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவீர்கள். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். எதையும் மனோ தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். வீடு தொடர்பான பணிகள் விரைந்து நடக்கும். அதே வேளையில் ஜென்ம  சனியால் நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். தொழில்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றி ஆலோசிப்பார்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி  மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும்.  கடந்த கால உழைப்பிற்கான பலன் கிடைக்கும். உறவினர்களுடன்  சுமுக உறவு இருந்தாலும் அவர்களால் கிடைக்கும் உதவி தாமதப்படும். பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.  விருந்து, விழாக்களில் அடிக்கடி பங்கேற்று மகிழ்வர். கலைத்துறையினருக்கு பொருளாதாரத்தில் பிரச்னை இருக்காது. சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல் துறையினருக்கு உறவு பலப்படும்.  தொண்டர்களுக்காக பணம் செலவழிக்க நேரிடும். மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் கேட்பதற்கு தயக்கம் காட்ட வேண்டாம்.   வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
பரிகாரம்: அம்மனுக்கு தீபம் ஏற்றி வணங்க காரிய வெற்றி உண்டாகும்.

அவிட்டம் 1, 2 பாதம்: பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிக்கும் திறமை பெற்ற உங்களுக்கு இந்த புத்தாண்டில் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக முடிவு எடுப்பது நன்மை தரும்.  உடல் ஆரோக்கியம்  ஏற்படும்.  மூன்றாம் இடத்தின் அதிபதி குரு ஆட்சியாக சஞ்சரிக்கிறார். மனதில் இருந்த குழப்பம், கவலை நீங்கும்.  தைரியம் உண்டாகும். வீடு மனை சம்பந்தமான காரியங்கள் அனுகூலம் தரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் அதிகரிக்கும்.  புதிய ஆர்டர்கள் பெறுவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தயக்கத்துடன் தங்களது பணிகளை செய்ய வேண்டி இருக்கும். எந்திரங்களை  இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த  கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். சொத்துக்கள் வாங்க எடுக்கும் முயற்சிகள் வேகப்படும். அக்கம் பக்கத்தினரிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும். பெண்களுக்கு எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். கலைத்துறையினருக்கு சனி சஞ்சாரத்தால் ஒரு பிரச்னை முடிந்ததும் இன்னொரு பிரச்னை உருவாகலாம். அரசியல் துறையினருக்கு எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். மாணவர்கள் அக்கறையுடன் படித்து முன்னேறுவர். மனகுழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும்.
பரிகாரம்: குலதெய்வத்திற்கு அர்ச்சனை  செய்ய கஷ்டங்கள் நீங்கி சுகம் உண்டாகும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us