விவாகரத்துக்கு பின் வேற மாதிரி அவதாரம் எடுக்கும் நடிகை
ADDED : 1425 days ago
ரொம்ப சமர்த்தாக நடித்து வந்த நடிகை திருமணம் விவாகரத்தில் முடிந்த பிறகு சினிமாவில் தீவிரம் காட்டி வருகிறார். இதுவரை நடித்திராத அளவுக்கு இறங்கி அடிக்கவும் முடிவு செய்துள்ளார். இதனால் கவர்ச்சியில் தாராளம், சர்ச்சை காட்சிகள் கொண்ட கதைகளுக்கு ஓகே சொல்லி வருகிறார். அந்த வரிசையில் தான் முதன்முறையாக ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட சம்மதம் சொன்னதும் என்கிறார்கள். இந்த பாடலிலும் நடிகை கவர்ச்சி அவதாரம் எடுத்திருக்கிறாராம். வித்தியாசமான பழி வாங்கலா இருக்கே...?