மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1415 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1415 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1415 days ago
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா சர்மா. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியை காதல் திருமணம் செய்து கொண்டார். அனுஷ்காவிற்கு இந்த வருடம் ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. விராட்டும், அனுஷ்காவும் தங்கள் குழந்தைக்கு வாமிகா எனப் பெயரிட்டுள்ளார்கள்.
குழந்தை பிறந்த பிறகு கிளாமரான புகைப்படங்களை அனுஷ்கா அதிகம் வெளியிட்டதில்லை. குறிப்பாக நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிடவேயில்லை. ஆனால், நேற்று நீச்சல் குளத்தில் நீச்சல் உடையுடன் சற்றே கிளாமரான இரண்டு புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதற்கு 24 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன.
அந்த நீச்சல் உடையின் விலை மட்டும் 8 ஆயிரம் ரூபாயாம். சமீபத்தில் ஒரு பேட்டியில் குழந்தை பெற்றதற்குப் பிறகான உடல் தோற்றத்தைக் குறித்து நிறைய பேசியிருந்தார் அனுஷ்கா. தான் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளதை வெளி உலகத்திற்குக் காட்டவே அனுஷ்கா இந்த நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
2018ல் வெளிவந்த 'ஜீரோ' படம்தான் அனுஷ்காவின் கடைசி ஹிந்திப் படம். கடந்த சில வருடங்களாகவே படங்களில் நடிக்காமல் வெப் சீரிஸ்களை மட்டும் தயாரித்து வந்தார். விரைவில் புதிய படங்களில் அவரைக் கதாநாயகியாக எதிர்பார்க்கலாம் என பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1415 days ago
1415 days ago
1415 days ago