மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
1410 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1410 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1410 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
1410 days ago
நடிகர் விக்ரம் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவை திடீரென அவரது வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். பி.சுசீலாவின் தீவிர ரசிகரான விக்ரம் அவரை நேரில் சந்திக்க விரும்பி உள்ளார். இதற்காக தனது மானேஜர் மூலம் தகவல் அனுப்பி உள்ளார். இதற்கு பி.சுசீலா அனுமதி அளித்தவுடன் வீட்டுக்கு சென்று சந்தித்துள்ளார்.
அவருடன் பத்து நிமிடம் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தவர் சுமார் 2 மணி நேரம் அவருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். சுசீலாவும், விக்ரமும் இணைந்து சில பாடல்களை பாடி உள்ளனர். அடிக்கடி வந்து உங்களை சந்தித்து பேச அனுமதி தர வேண்டும் என்றும் அவர் சுசீலாவிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம் என்று அவரும் தெரிவித்திருக்கிறார். அதோடு ‛‛என் வாழ்க்கைக் கனவு நனவானது என்றும், அதற்கு அந்த ஆண்டவனுக்கு நன்றி'' என்றும் விக்ரம் கூறிவிட்டுச் சென்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இந்த சந்திப்பு குறித்து தற்போது பாடகி சுசீலா தரப்பு சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
1410 days ago
1410 days ago
1410 days ago
1410 days ago