நானே வருவேன் - விலகிய ஒளிப்பதிவாளர்
ADDED : 1391 days ago
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் படம் ‛நானே வருவேன்'. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய யாமினி விலகி விட்டார். இவர் தான் செல்வராகவன் நடிக்கும் சாணிக்காயிதம் படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இதுப்பற்றி யாமினி கூறுகையில், ‛‛செல்வராகவன் மற்றும் 'நானே வருவேன்' படக்குழுவுடன் பணிபுரிந்தது சிறந்த அனுபவமாக இருந்தது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த படத்திலிருந்து விலகுகிறேன். படக்குழுவுக்கு வாழ்த்துகள். உங்கள் ஆதரவுக்கு நன்றி'' என்றார்.