மேலும் செய்திகள்
இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா?
1381 days ago
விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான்
1381 days ago
டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்'
1381 days ago
சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளியாக நடித்து இப்போது அகில இந்திய நட்சத்திரமாகி இருக்கும் ராஷ்மிகா மந்தனா, கர்நாடகத்தை சேர்ந்தவர். கிரிக் பார்ட்டி என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு தெலுங்கிற்கு வந்து முன்னணி நடிகை ஆனார். கீதா கோவிந்தம், டீயர் காம்ரேட் ஆகிய படங்களில் இருவரும் நடித்தனர். அப்போது முதலே இவர்களுக்குள் காதல் என தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இதுகுறித்து இருவரும் மவுனம் காத்து வந்தார்கள்.
இப்போது சில நிகழ்வுகளை பார்க்கும் போது இருவரும் காதலிக்கிறார்களோ என்ற சந்தேகத்தை அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு விஜய் தேவரகொண்டா படப்பிடிப்புக்காக பாரீஸ் சென்றார். அவர் பாரீசில் தங்கி இருக்கும்போது ராஷ்மிகா மந்தனாவும் பாரீஸ் சென்றார். இப்போது புதிய ஆதாரமாக இருவரும் மும்பை நட்சத்திர ஓட்டல் ஒன்றிலிருந்து பின்புற வாசல் வழியாக ஒருவர் பின் ஒருவராக வெளியேறி ஒரே காரில் ஏறிச் செல்லும் படங்கள், வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதனால் இருவரும் காதலிப்பது உண்மை தான் என ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
1381 days ago
1381 days ago
1381 days ago