மேலும் செய்திகள்
இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி'
1352 days ago
செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ்
1352 days ago
நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது
1352 days ago
ஹரி இயக்கத்தில் அவரது மைத்துனர், நடிகர் அருண் விஜய் முதன்முறையாக நடித்துள்ள படம் ‛யானை'. கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியானது. ராமநாதபுரம் கதைக்களத்தில் தயாராகி உள்ள இந்த படத்தில் ஹரியின் வழக்கமான அதிரடி காட்சிகள் உள்ளன. டீசரின் முடிவில் ‛‛இவனுக்கு தூக்கி சுமக்கவும் தெரியும், தூக்கி போட்டு மிதிக்கவும் தெரியும்'' என டயலாக் இடம் பெற்றுள்ளது. 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
1352 days ago
1352 days ago
1352 days ago