மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1376 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1376 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1376 days ago
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் தமிழக குடும்ப பெண்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சமீபத்தில் அந்த தொடரின் வெற்றி விழா கொண்டாடிய போது சாமானிய ரசிகர்களில் சிலர் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தை பார்த்து இன்ஸ்பியர் ஆகி வாழ்வில் சாதித்த கதைகளை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் அந்த தொடரில் தற்போது சமகால சமூக பிரச்னையை பேசி அதற்கு தீர்வு சொல்லும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மாணவிகளுக்கு பள்ளியிலும், பொதுவெளியிலும் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த சம்பவங்களை மையப்படுத்தியும் அதற்கு தீர்வு கூறும் விதமாகவும் இந்த எபிசோடுகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த சமூக பிரச்னையை சீரியல் மூலம் அனைவரிடமும் கொண்டு சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே சீரியல் குழுவினரின் நோக்கம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் ப்ரணிகா நடித்து வருகிறார். அவர் நடிக்கும் காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன.
1376 days ago
1376 days ago
1376 days ago