மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
1335 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
1335 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
1335 days ago
பிரபல கானா பாடகியான இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தமிழகத்தில் மூலைமுடுக்குகளில் கூட பிரபலமானார். இசைவாணியில் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை சதீஷ் என்ற கானா பாடகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் எழவே அவரை விட்டு பிரிந்துவிட்டார். தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இசைவாணி தற்போது முன்னாள் கணவர் சதீஷ் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், 'சதீஷ் என்னுடைய பெயரில் போலி சமூக வலைத்தள கணக்கை தொடங்கி மோசடி செய்து வருகிறார். என் பெயரில் பல நிகழ்ச்சிகளுக்கு முன்தொகை வாங்கியுள்ளார். இதை தட்டிக்கேட்டால், அப்படிதான் செய்வேன், உன்னால் என்ன செய்ய முடியும் என தகாத வார்த்தைகளில் திட்டுவதோடு, நீ கச்சேரிக்கு செல்லும்போது உன் மீது ஆசிட் வீசுவேன். கொலை செய்வேன் என மிரட்டுகிறார்' என்று அதில் தெரிவித்துள்ளார்.
1335 days ago
1335 days ago
1335 days ago