மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1334 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1334 days ago
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குனரான நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் பீஸ்ட். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இயக்குனர் செல்வராகவன், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், லிலிபுட் புரூக்கி, நடிகை அபர்ணா தாஸ், அங்கூர் அஜித் விகால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
முழுக்க முழுக்க சட்டவிரோத கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ராணுவ கமாண்டாவாக நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் மாஸாக உருவாகி உள்ளன. இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாகவுள்ளதாக தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதனால் #BeastFistSingle என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது. படக்குழு இதுபற்றி இன்னும் அதிகாரபூர்வமான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
1334 days ago
1334 days ago