ஜனவரி 26ல் விஷாலின் வீரமே வாகை சூடும் ரிலீஸ்
ADDED : 1507 days ago
எனிமி படத்தை அடுத்து து.ப .சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் வீரமே வாகை சூடும். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது வீரமே வாகை சூடும் படம் வருகிற ஜனவரி 26ம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்திருக்கிறார் விஷால்.
அதோடு பெண்களின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்கள் கண்டிப்பாக வெற்றிபெறும். அந்த வகையில் இந்த படத்தில் இரண்டு நாயகிகளுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சாமானிய மனிதனின் கோபம்தான் இந்த வீரமே வாகை சூடும் படத்தின் கதை என்றும் தெரிவித்துள்ளார் விஷால்.