மாளவிகாவின் கவர்ச்சி மிரட்டலில் மாலத்தீவு
விதவிதமாக செய்தித் தலைப்பு வைப்பதற்காகவே மாளவிகா மோகனன் தனது மாலத்தீவு சுற்றுலா புகைப்படங்களை வெளியிடுகிறார் போலிருக்கிறது. ஏற்கெனவே, 'மாலத்தீவில் மறைத்த பிகினியுடன் மாளவிகா மோகனன்', என்று ஒரு செய்தியும், இன்று காலையில், 'கடல் மீது காதலில் விழுந்த மாளவிகா மோகனன்' என்று ஒரு செய்தியும் ரைமிங் தலைப்புடன் வைக்கும் அளவிற்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் மாளவிகா.
இன்னும் எத்தனை புகைப்படங்கள், வீடியோக்கள் வரப்போகிறதோ ? என்று காலை வெளியிட்டட செய்தியில் கேட்டிருந்தோம். அந்த செய்தி உலகம் முழுவதும் சென்று சேர்வதற்குள் அடுத்த கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார் மாளவிகா.
தொப்புள் தெரியும் அளவிற்கு வித்தியாசமான பிகினி உடையில் சோம்பல் முறிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, “கடலுக்குள் என்னுடைய வழியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார். மாளவிகாவின் இந்த கவர்ச்சிப் புகைப்படங்களால் மாலத்தீவு மிரண்டு போயிருக்கும்.