டென்ஷன் ஆன காமெடி
ADDED : 1385 days ago
புயல் நடிகர் தனது காமெடி பயணத்தை நாயுடன் மீண்டும் தொடங்கி இருக்கிறார். படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் மேக்அப் போட்டு காத்திருந்தாராம். அவருடன் நடிக்க வேண்டிய வைத்தியர் படத்தின் மூலம் திடீர் புகழ்பெற்ற அரசனின் பெயர் காமெடி நடிகர் மிகவும் லேட்டாக வந்தாராம். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற நடிகர், மேக்அப்பை கலைத்து விட்டு புயல்போல புறப்பட்டு சென்று விட்டராம். ஆரம்பத்திலேயே இப்படியா என திரையுலகினர் முணுமுணுக்கின்றனர்.