அகண்டா இயக்குனரின் அடுத்த படம்: ராம் பொத்தனேனி நடிக்கிறார்
ADDED : 1550 days ago
கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற படம் அகண்டா. என்.டி.பாலகிருஷ்ணா படங்களிலேயே அதிக வசூலை குவித்த படமாக அமைந்தது. இந்த படத்தை போயபதி ஸ்ரீனு இயக்கி இருந்தார். அடுத்து அவர் அகண்டா இரண்டாம் பாகம் எடுக்க இருக்கிறார் என்று பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது ராம் பொத்தனேனி நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார். இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ராம் பொத்தனேனி லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கும் தி வாரியர் படத்தை தயாரிக்கும் ஸ்ரீனிவாசா சிந்தூரி தயாரிக்கிறார். இது தெலுங்கு, இந்தி, தமிழ் மொழிகளில் தயாராகிறது.