மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1283 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1283 days ago
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் டிடிக்கு அடுத்தப்படியாக பெண் தொகுப்பாளர்களில் முக்கிய இடத்தில் இருப்பவர் ப்ரியங்கா. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை மாகாபா, ப்ரியங்கா காம்போ தான் எப்போதுமே தொகுத்து வழங்கி வருகிறது. பிரியங்கா இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று விட்டார்.
எனவே, இம்முறை ஜூனியர் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியி மா கா பா மற்றும் மைனா நந்தினி இணைந்து தொகுத்து வழங்கி வந்தனர். பிக்பாஸ் சீசன் 5 முடிந்ததும், ப்ரியங்காவிடம் பலரும் எப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு வருவீர்கள் என பலரும் கேள்வி கேட்டு வந்தனர். அதற்கேற்றார்போல் பிரியங்காவும் ஜூனியர் சூப்பர் சிங்கர் சீசன் 8-ல் எண்ட்ரி கொடுத்தார். ஆனால், அவர் ஒருவாரம் மட்டுமே வந்தார். அதன்பிறகு மீண்டும் மைனா நந்தினியே மாற்றப்பட்டார்.
இதற்கான காரணம் என்ன என்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ப்ரியங்கா நிகழ்ச்சிகளுக்கு வராமல் அடிக்கடி ப்ரேக் எடுத்துக் கொள்கிறாராம். அதுமட்டுமில்லாமல் முதல் வார எபிசோடை முடித்தவுடன் பிக்பாஸ் ஹவுஸ்மேட்களான பாவனி, அபிஷேக், மதுமிதா, அமீர் ஆகியோருடன் ஐதராபாத் சென்றவர் அதன்பின் நிகழ்ச்சிக்கு வரவே இல்லையாம். அதனால் தான் மீண்டும் மைனா நந்தினியே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
1283 days ago
1283 days ago