மேலும் செய்திகள்
சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த்
1280 days ago
ரஜினி, கமல் பட இயக்குனர் யார்? இன்னும் தீராத சந்தேகம்
1280 days ago
'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர்
1280 days ago
விஷால் நடித்த வீரமே வாகை சூடும் படம் கடந்த ஜனவரியில் வெளியானது.. இந்தப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லத்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஷால்.. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத்குமார் என்பவர்தான் இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் ஆக்சன் காட்சிகள் நிறைய உள்ளன. அந்தவகையில் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் வடிவமைத்த இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகளில் நடித்தபோது விஷாலுக்கு சின்னச்சின்னதாக பல காயங்கள் ஏற்பட்டன.
இதனை தொடர்ந்து காயங்களுக்கு சிகிச்சை பெறவும் அப்படியே கொஞ்ச நாட்கள் ரிலாக்சாக ஒய்வு எடுக்கவும் கேரளா கிளம்பினார் விஷால். கேரளாவில் பாலக்காடு அருகே உள்ள புகழ்பெற்ற பெரிங்கோடு குருகிருபா ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை முடிந்து, காயங்கள் குணமாகி, உடலும் மனமும் புத்துணர்ச்சி பெற்ற நிலையில் மீண்டும் இன்றுமுதல் லத்தி படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடிக்க துவங்கியுள்ளார் விஷால்.
1280 days ago
1280 days ago
1280 days ago