விக்ரம் படத்தை கைப்பற்றிய உதயநிதியின் ரெட் ஜெயண்ட்
ADDED : 1486 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இந்த படம் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிரூத் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் தமிழகத்தில் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை கமல்ஹாசன் தனது ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் .