மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1278 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1278 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1278 days ago
நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலா இயக்கும் தனது 41 ஆவது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டியும், தங்கையாக மலையாள நடிகை மமிதா பைஜுவும் நடிக்க, ஜிவி .பிரகாஷ் இசையமைக்கிறார்.
2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்த வரும் நிலையில் அடுத்து மதுரை, கோவாவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார் பாலா. இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் அதில் ஒரு வேடத்தில் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக நடிப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து அப்பட வட்டாரத்தில் விசாரித்தபோது, இப்படத்தில் சூர்யா ஒரு வேடத்தில் மட்டுமே நடிப்பதாகவும், இதற்கு முன்பு பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் விக்ரம் நடித்தது போன்று ஒரு மாறுபட்ட ஹீரோவாக சூர்யா நடித்து வருவதாகவும் கூறுகிறார்கள்.
1278 days ago
1278 days ago
1278 days ago