மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
1278 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1278 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1278 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
1278 days ago
தமிழில் 1999ம் ஆண்டு சுந்தர். சி இயக்கத்தில் அஜித் நடித்த உன்னை தேடி என்ற படத்தில் அறிமுகமானவர் மாளவிகா. அதைத்தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், சந்திரமுகி, வெற்றிக்கொடி கட்டு என பல படங்களில் நடித்தவர், 2007ம் ஆண்டு சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டவர் அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது தன்னை தமிழில் அறிமுகம் செய்த சுந்தர். சி இயக்கி வரும் புதிய படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார் மாளவிகா. இந்தப்படத்தில் மங்கம்மா என்ற கேரக்டரில் நடிக்கும் மாளவிகாவுக்கு ஜோடியாக டைரக்டர் மனோபாலா நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இப்படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய் என மூன்று ஹீரோக்கள் நடிக்க அவர்களுக்கு ஜோடியாக அமிர்தா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் மாளவிகா கலந்து கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் மனோபாலா.
1278 days ago
1278 days ago
1278 days ago
1278 days ago