மேலும் செய்திகள்
மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ்
1272 days ago
200 படங்களை கடந்த 2025
1272 days ago
முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி
1272 days ago
அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி
1272 days ago
தமிழ் நடிகையான சமந்தா தெலுங்கு படங்களில் நடித்தபோது நாகசைதன்யாவுடன் காதல் ஏற்பட்டு கடந்த 2017ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் நான்கு ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு அவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தாங்கள் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தார்கள்.
மேலும், ஏற்கனவே ‛தி பேமிலி மேன்-2' வெப்சீரிஸ் மூலம் ஹிந்தி ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தார் சமந்தா. அதையடுத்து அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி பாலிவுட்டில் பேசப்பட்டார். இந்நிலையில் தற்போது ஹிந்தியில் அதிக படங்களில் நடிப்பதற்கு தீவிரம் காட்டி வரும் சமந்தா, இதுவரை மும்பையில் வாடகைக்கு வீடு பிடித்து தங்கி இருந்தவர் தற்போது மும்பை கடற்கரை பகுதியில் மூன்று கோடி மதிப்பில் ஒரு வீடு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் ஹைதராபாத்தை தொடர்ந்து அடுத்தபடியாக மும்பையில் குடியேறி விடுவார் என்றும் கூறப்படுகிறது.
1272 days ago
1272 days ago
1272 days ago
1272 days ago