பூஜையுடன் சென்னையில் துவங்கிய விஜய் 66 படப்பிடிப்பு
ADDED : 1519 days ago
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் .
இந்த படம் காமெடி கலந்த குடும்ப சென்டிமெண்ட்டில் உருவாகிறது. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் . பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார் . இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார் .
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(ஏப்., 6) பூஜையுடன் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் துவங்கியுள்ளது . முதற்கட்டமாக பாடல் காட்சி படப்பிடிப்பு 5 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது .