சிவகார்த்திகேயனின் 20வது படத்தின் ரிலீஸ் எப்போது?
ADDED : 1566 days ago
சிவகார்த்திகேயன் நடிக்கும் 20 வது படத்தை இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷப்கா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், பிரேம்ஜி, ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .