மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1261 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1261 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1261 days ago
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் படம் பற்றிய அறிவிப்புகள் என்றாலே அவரது ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும். அவரது அடுத்த படமான 169வது படத்தை நெல்சன் இயக்க உள்ளதாக ஏற்கெனவே அறிவிப்புகள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் 'பீஸ்ட்' படத்தை நெல்சன் சிறப்பாக இயக்கவில்லை என்ற ஒரு சர்ச்சையும் கடந்த ஒரு வார காலமாக இருந்தது. ரஜினிகாந்த் 'பீஸ்ட்' படத்தைப் பார்த்தாகவும், ஆனால், படம் பார்த்துவிட்டு எதுவுமே சொல்லாமல் போய்விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின. அதனால், ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணி சேருமா, சேராதா என்ற ஒரு சந்தேகம் எழுந்தது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக ரஜினிகாந்த் அவருடைய டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் 'கவர்' போட்டோவை மாற்றியுள்ளார். 169வது பட அறிவிப்பின் வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட போட்டோவை 'கவர்' போட்டோவாக மாற்றியுள்ளார். நேற்று இயக்குனர் நெல்சனும் அவரது டுவிட்டர் ப்ரொபைலில் 'தலைவர் 169' என்ற தனது அடுத்த படத்தை தன்னுடைய படப்பட்டியலில் சேர்த்திருந்தார்.
இதன் மூலம் ரஜினிகாந்த் 169 படம் பற்றிய சர்ச்சைகளுக்கு முடிவு வந்துள்ளது.
1261 days ago
1261 days ago
1261 days ago