மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1248 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1248 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1248 days ago
விஜய் டிவியின் ராஜா ராணி சீசன் 2வில் ஆல்யாவிற்கு பதிலாக ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார் ரியா. சென்னையை சேர்ந்த பிரபல மாடலான இவர், விஜய் டிவி நடிகரான வீஜே விஷாலின் தோழி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இருவரும் காதலித்து வருவதாக சோஷியல் மீடியாக்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அதற்கு காரணம், சமீபத்தில் நடந்த விஜய் டெலிவிஷன் விருது நிகழ்ச்சியில் வீஜே விஷாலுக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் மேடையில் ஏறியது முதல் விருதை வாங்கி பேசி முடித்துவிட்டு கீழே இறங்கி வரும் வரை அடிக்கடி ரியாவின் முகத்தை காண்பித்தனர். அதிலும், ரியாவின் அருகிலிருந்த அர்ச்சனா அடிக்கடி ரியாவின் ரியாக்ஷனை பார்த்துக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில் சமூகவலைதளத்தில் கேள்வி பதிலில் ரசிகர் ஒருவர் 'உங்கள எப்படி கரெக்ட் பன்றது' என்று கேட்க, ரியா 'நான் அல்ரெடி கமிட்டெட்' என பதிலளித்துள்ளார். இந்த புள்ளிகளை இணைத்து துப்பறிந்த நெட்டிசன்கள் விஷாலை தான் ரியா காதலிக்கிறார் என கிளப்பி விட்டுள்ளனர். எனினும், இது குறித்து ரியாவோ, விஷாலோ வெளிப்படையாக எந்த ஒரு தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
1248 days ago
1248 days ago
1248 days ago