ரஜினியுடன் நடிக்கும் சிவராஜ்குமார்?
ADDED : 1228 days ago
ரஜினிகாந்த்தின் 169 வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிரூத் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் வடிவேலு, பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள் . படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யாராய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் நடிகை ரம்யாகிருஷ்ணன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். தற்போது இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சிவராஜ் குமாருடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.