வாரிசு படத்தில் விஜய் ஓட்டும் பைக்கின் விலை 2 லட்சத்து 25 ஆயிரமா?
ADDED : 1207 days ago
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார் உள்பட பலர் நடித்துவரும் வாரிசு படத்தின் மூன்று போஸ்டர்கள் விஜய்யின் பிறந்த நாளான நேற்று அடுத்தடுத்து வெளியாகி அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. என்றாலும் அதில் ஒரு போஸ்டரில் கூட தமிழில் வாரிசு என்ற பெயர் இடம் பெறாதது அவரது ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை கொடுத்தது.
இந்நிலையில் விஜய் பிறந்தநாளில் வெளியான மூன்றாவது போஸ்டரில் விஜய் ஒரு பைக்கில் அமர்ந்திருப்பார். அந்த பைக்கின் விலை 2 லட்சத்து 25 ஆயிரம் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பைக்கை மலைப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நபர்கள்தான் அதிகமாகப் பயன்படுத்துவார்கள். இந்த பைக்கை ஓட்டியபடி வாரிசு படத்தில் இரண்டு காட்சிகளில் விஜய் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.