மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
1189 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1189 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1189 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
1189 days ago
ஒரு பக்கம் நடிகை கடத்தல் வழக்கு சம்பந்தமான விசாரணை, நடிகர் திலீப்புக்கு நெருக்கடியை கொடுத்து வந்தாலும், அதையெல்லாம் சமாளித்துக் கொண்டு இன்னொரு பக்கம் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார் திலீப். அந்தவகையில் கடந்த 2018லேயே பறக்கும் பப்பன் என்கிற படத்தில் திலீப் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. கிராமத்தில் இருக்கும் ஒருவனுக்கு சூப்பர் பவர் கிடைப்பதாகவும், அதன்பின் நடக்கும் அதிசயங்கள் என்ன என்பதை மையப்படுத்தியும் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கம், திலீப்பின் வழக்கு பிரச்னைகள் ஆகியவற்றால் இந்த படம் துவங்குவது தாமதமாகி வந்தது. இந்த நிலையில் இந்த படம் விரைவில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்ல இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்கிற தகவலும் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அனிருத் போன்றவர்கள் இசை மற்றும் சூப்பர்மேன் கதையம்சம் இதெல்லாம் சேர்த்து, இந்த படத்தை பான் இந்தியா லெவலில் வெளியிடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக திலீப் கருதுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
1189 days ago
1189 days ago
1189 days ago
1189 days ago