ஜெயம் ரவி படத்தில் நிகழ்ந்த மாற்றம்
ADDED : 1177 days ago
அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி, டாப்சி நடிப்பில் ‛ஜன கன மன' படம் உருவாகிறது. பாதி படப்பிடிப்பு வளர்ந்த நிலையில் சில காரணங்களால் இந்த படம் நின்று போய் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை ஒதுக்கி வைத்துவிட்டு மீண்டும் அஹமது - ரவி கூட்டணியில் மற்றொரு படம் தயாராகிறது. இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். தனி ஒருவன் படத்திற்கு பின் மீண்டும் இவர்கள் இணைந்துள்ளனர். 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா பணியாற்றுவார் என கூறப்பட்டது. தற்போது அவருக்கு பதில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளாராம்.