மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1119 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1119 days ago
நீண்ட நாட்கள் ஓடி சாதனை படைத்த சீரியல் 'சந்திரலேகா'. கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரானது 2254 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்த தொடரில் ஸ்வேதா பண்டேகர், நாகஸ்ரீ, சந்தியா ஜகர்லமுடி மற்றும் ராணி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இத்தனை வருட காலக்கட்டத்தில் பல நடிகர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், 2014ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் விரைவில் க்ளைமாக்ஸ் எபிசோடு வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கேற்றார்போல் ராதிகா ப்ரீத்தி நடிக்கும் புதிய சீரியல் ஒன்று தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், சந்திரலேகா தொடர் விரைவிலேயே முடித்து வைக்கப்பட்டு அதன் இடத்தை அந்த புது சீரியல் பிடிக்கும் எனவும் சின்னத்திரை வட்டாரங்களில் பேச்சு அடிப்பட்டு வருகிறது. இதனால், இந்த தொடரின் முக்கிய ரசிகர்களான இல்லத்தரசிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
1119 days ago
1119 days ago