இணையத்தில் கசிந்த 'வாரிசு' படத்தின் பாடல் காட்சிகள்
ADDED : 1379 days ago
நடிகர் விஜய் தற்போது தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ஷாம், பிரபு, யோகிபாபு ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் வாரிசு தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் தொடர்ந்து லீக்காகி வருகின்றன. இந்நிலையில் இப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா நடனம் ஆடும் பாடல் காட்சி வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்து வைரலானது. இதையடுத்து அந்த வீடியோவை நீக்கும் வேலைகளையும் படக்குழு ஈடுபட்டுள்ளது.